சமீபத்தில் ராஜீவ் கொலைவழக்கின் மூன்று குற்றவாளிகள் விடுதலை குறித்து  ஹிந்துஸ்தான் டைம்ஸால் அவர்களின் தளத்தில்   நடத்தப்பட்ட கருத்துகணிப்பில் பங்குகொண்ட சகோதரர்கள் அதிர்ச்சியாகி  முகநூலில் பதிந்த செய்தி கண்ணில் பட்டது...   தாங்கள் தளத்தில் ஓட்டுபோட்டபோது இருந்த ரிசல்டானது  அடுத்த நாள் அவர்களின் பத்திரிக்கையில்   மாற்றியமைக்கப்பட்டுள்ளது என கொந்தளித்தனர்.  ( http://goo.gl/8PCQnl )

மோடியின் பொய்புரட்டுகள் பரிட்சயமனாதலால், அவரின் பேஜ் ஐடிக்களின் அலப்பறைகள் மற்றும் அவருக்காக செயல்படும் மென்பொருள் நிறுவனங்கள் செய்யும் மோசடியும் அவ்வபோது பகிரப்படுவதால் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை என்றாலும் நேற்று பத்திரிக்கைதுறையில் பணியாற்றும் சகோதரர் பீர் முஹம்மத்  tag செய்த விசயம் கவனத்தை ஈர்த்தது...
கருத்துகணிப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல! அதன் முடிவுகள் ஒருவரின் மனபோக்கை தீர்மானிக்க மற்றும் மாற்றியமைக்க  சக்தி பெற்றது. ஒருவேளை நாம் மட்டும் தான் தவறான புரிதலில் இருக்கிறோமா என  ஒருவரின் இறுதி முடிவுகள்  மற்றும்  அசைக்கமுடியா நம்பிக்கைகளையும்  பதம் பார்க்கக்கூடியது.  இத்தகைய சக்திவாய்ந்த ஒரு களத்தை    தான்   இந்தியாவில் செயல்படும் கருத்துகணிப்பு நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காக  ஒட்டுமொத்தமக்களையும் முட்டாளாக்கியுள்ள  விஷயம்  அம்பலமாகியுள்ளது.

அவர்களின் மோசடியை  News Express  எனும் தனியார் செய்தி தொலைகாட்சி , தங்கள் நடத்திய புலனாய்வில் வெளிபடுத்தியுள்ளது.  Operation Prime Minister என பெயரிடப்பட்ட  இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில் இந்தியாவில் பிரபலமாக  இயங்கிகொண்டிருக்கும் 11 மோசடி நிறுவனங்களை வெளிச்சமிட்டு காட்டியது.

தேர்தல் ஆணையம் ,  அரசியல் கட்சிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கருத்து கணிப்பு குறித்து அவர்களின் கருத்துக்களை அறிய  விடுத்த அழைப்பு தான்  இந்த    புலனாய்வை ஆரம்பிக்க உந்துதலாக  அமைந்தது. அதன் பிறகே களத்தில் இறங்கினர்.  அவர்களின் ஆய்வுக்கு பிறகு தங்கள் சேனலில் நேற்று  அதிர்ச்சிகர செய்திகள் பலவற்றை வெளியிட்டனர்.  கடந்த காலத்தில் எப்படியெல்லாம் மோசடி நடைபெற்றது என இந்த புலனாய்வில் ஆழமாக  குறிப்பிடவில்லை எனினும் திரித்து கூறப்படும்  முடிவுகளுக்கு வெவ்வேறு கட்டணங்களில் பணம் வாங்கப்பட்டதும்,  சில அரசியல் கட்சிளுக்கு ஆதரவாக  போலியான முடிவுகள் சமர்பிக்கப்பட்டத்தையும்  தங்கள் செய்தி சேனலில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அவர்கள்  வெளியிட்டதகவலில் சில துளிகள் :

இந்த கருத்துகணிப்பு ஏஜேன்சி தலைமை எப்போதும் இருவித கோப்புகளை பராமரிக்கின்றது. அரசியல் கட்சிகளின் சார்பில்  அணுகப்படும்போது இவர்கள்  பணத்திற்காக  , திரித்து மாற்றியமைக்கப்பட்ட தரவை கொடுக்க  தயாராகவே உள்ளது.

வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் , எதிர்மறையான டேட்டாக்களை நீக்குதல், சாதகமான எரர் மார்ஜின் உயர்த்துதல் என உண்மையான தரவுகளை எந்த அளவிற்கு மாற்றவும் தயாராகவே உள்ளனர்.

இப்படியாக திரித்து முடிவுகள் தருவதற்கு கருத்துகணிப்பின்  கரு பொறுத்து வெவ்வேறு வகையில் கட்டணத்தை வசூலிக்கின்றனர். பிரபல செய்தி சேனல்களில், செய்திதாள்களில் இவற்றை வெளியிடவும் உறுதியளித்துள்ளனர். 

இப்படியான பொய்யான கருத்துகணிப்பு முடிவுகள் தான்  செய்தி நிறுவனங்கள், ஊடகங்கள், டிவிகளிடம் கொடுக்கப்பட்டு மக்கள் மன்றத்தில் முன்வைக்க்கப்பட்டுகிறது. இதனை நம்பி மக்களும் முட்டாளாக்கப்படுகின்றனர்.

 இந்த புலனாய்வில் முக்கியமாக மாட்டியுள்ள கட்சி பிஜேபி தான்.

சமீபத்தில் உபி யில் இன்ன அரசியல் கட்சி  , இத்தனை இடங்களில் வெற்றிபெறும் என சொல்லப்பட்ட கருத்து கணிப்பு  முடிவு உண்மையானதல்ல என  நியூஸ் எக்ஸ்ப்ரஸ் செய்தி நிறுவனம்  கூறியுள்ளது.

______

இந்த  புலனாய்வில்மூலம்   பிரபலமான கருத்து கணிப்பு நிறுவனமான  சி-வோட்டர் செயல்பாடுகள்  குறித்தும்  முணுமுணுக்கப்படுகிறது.  இந்தியா டுடே குழுமம், இந்தப் புலனாய்வுக்கு மதிப்பளித்து தனது இதழுக்காகவும் ஹெட்லைன்ஸ் டுடே/ஆஜ் தக் சேனலுக்காகவும் சி-வோட்டர் நிறுவனம் மூலம் எடுக்கவிருந்த கருத்துக் கணிப்புக்கான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது.  விளக்கம் கேட்டு நோட்டீஸ்ஸும் அனுப்பியுள்ளது.

இவ்வளவு கோடிகள் செலவளித்து பொய்யான கருத்துகணிப்பு முடிவுகள் வெளியிட வேண்டிய அவசியம் என்ன??

"Make the lie big, make it simple, keep saying it, and eventually they will believe it”

இப்படிதான் துரோகிகளையும், விஷமிகளையும்   ஹீரோவாக ஏற்றுள்ளோம்!  நாடு எங்கே உருப்படபோகுதுன்னு சிந்திக்கிறதுக்கு முன்னாடி நம்மல எப்படியெல்லாம் ஈசியா முட்டாளாக்குறாங்கன்னு சிந்திப்போமா? ப்ளீஸ்...

நன்றி:
சகோ பீர் முஹம்மத் (ஜெர்னலிஸ்ட்)
சகோ நசீம்
அவுட்லுக் இந்தியா.காம்




, , , , ,