நிர்மலா பெரியசாமியால் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்க்க சொல்லி அம்மா அடிக்கடி சொல்வார். என்னதான் இருக்கு என மதியவேளைகளில் ஒருமுறை பார்த்த போது, அழுதுகொண்டே அப்பெண் சொல்லும் குடும்ப பிரச்சனையை புரிந்துகொள்ளமுடியவில்லை. எப்படியோ புரிஞ்சுக்கிட்டு பார்த்துக்கொண்டு வரும் நேரத்தில் திடீரென சண்டையில் முடிகிறது... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது :-)  என ஒதுங்கினாலும் அவ்வபோது விளம்பரம் பாடாய்படுத்தும் :( ... அந்த விளம்பரத்திலும் நான் மேலே சொன்ன அழுகை மற்றும் சண்டை தான்.... டி ஆர் பி ரேட் தான் முதன்மையான காரணம் இதற்கு.... ஒருமணி நேரமோ அரை மணி நேரமோ ஓடுகிறதென நினைக்கிறேன். (நான் டீவி பாக்குறதில்லைங்குறது இப்பவாவது நம்புங்க மக்கா...நம்புங்க!)

சிறுவயதில் வீட்டில் நடக்கும் குடும்ப பிரச்சனைகளில் தாத்தா தான் நாட்டாமை. தாத்தா அருகில் அமர்ந்துகொண்டு, தாத்தா காலை பிடித்துக்கொண்டே  அவர்கள் பேசுவதை கேட்பதுண்டு (தேவர் மகன் சிவாஜியையும் அதில் வரும் நண்டு சுண்டுகளையும் கற்பன பண்ணிக்கோங்க)...  பிரச்சனைக்குரிய கணவன் மனைவியை (இது சித்தி-சித்தப்பா, மாமா-மாமி என குடும்ப உறுப்பினராகத்தான் இருக்கும்) தனித்தனியாக அழைத்து விசாரிப்பார். அதன் பின் இருவரையும் வைத்து அறிவுரை சொல்லி அனுப்புவார். அவ்வளவுதான் பிரச்சனை முடிந்தது...  (பெரியவங்க சண்டைல சின்னபசங்க ஏன் விட்டாங்க?ன்னு யோசனையா இருக்கா??? நானும் எங்க அக்காவும் "இது  என் காலு, அது உன் கால்" என தாத்தாவின் காலில் பாகப்பிரிவினை சண்டை போடுவதால் அந்த மொக்கை பிரச்சனைகளை காதில் வாங்குவதில்லை. அதுனால அவுங்களும் கண்டுக்கலையோ என்னவோ..)

ஏனோ அந்த நிகழ்ச்சியையும் அதில் வந்த சண்டைகளையும் பார்க்கும் போது வீட்டுல் நடந்த பஞ்சாயத்துகள் நியாபகத்துக்கு வந்தன...

1. குடும்பத்தில் பேசி முடிக்க முடியாத பிரச்சனையையா மீடியா தீர்த்துவிட போகிறது?

2. கணவனின் குறைகளை  நிகழ்ச்சியில் சொல்கிறார்கள். இது நிச்சயம் அந்த ஆணை அவமானப்படுத்தவே செய்யும். அதன் பின் எப்படி எல்லாவற்றையும் மறந்து அந்த ஆண் மீண்டும் இணைவானா... அப்படி மீண்டும் இணைந்தால் அவன் ஆயிரத்தில் ஒருவன் :-)

3. அடிதடியை  அனைவர் பார்க்கும் நிகழ்ச்சியில் காட்டுவதால் பிரச்சனை பெரிதாகுமே தவிர தீர்வு நோக்கி போய்விடுமா? இது மேலும் இரு குடும்பத்திற்கும் விரிசலைதானே உண்டாக்கும்...

4. இப்பலாம் கவுன்சிலிங் பண்றவங்க நிறைய பேரு இருக்காங்க. அவங்க கிட்ட நம் பிரச்சனையை சொன்னால் பிரச்சனையை முடிஞ்சளவு தீர்க்கவாவது பாப்பாங்க. அதை விடுத்து 'இதான் கணவன், இதான் மனைவி, இதான் பிரச்சனை என டிவியில் சொல்வதன் மூலம் என்ன சொல்ல வராங்க? பிரச்சனையை தீர்க்குறது எப்படின்னா???

என்னமோ....

எனக்கு நம்பிக்கை இல்ல... இது போன்ற நிகழ்ச்சிகளில் தீர்வு கிடைக்குமான்னு தெரியல.. கெடைச்சா நல்லது தான்! :-)

ஆங்க்... தாத்தா பத்தி சொன்னேன்ல??? இந்த பதிவின் அடுத்த சாரம் இதுதான்... இப்பலாம் கூட்டுகுடும்ப உறவு முறை சிதைஞ்சுட்டே வரதுனால  நம் பிரச்சனையை அடுத்தவர்களிடம் சொல்லும் நிலையே கூடிக்கொண்டு வருகிறது. நம் அருகில் அனுபவம் கொண்ட பெரியவர்கள் இப்போதெல்லாம் இல்லாததால், அல்லது இருக்க வைக்க விரும்பாததால் கோர்ட்களில் குடும்பநல வழக்குகள் அதிகமாய்ட்டே வருது....  (ஆமி! நீ மட்டும் என்ன கூட்டுகுடும்பத்துலையா இருக்க?ன்னு ஆரோ  சீண்டுதாக... வேண்டாம் அழுதுடுவேன்:-)

வேறொன்னும் இல்லைங்க.. என்னை பொறுத்தவரை, நான் பார்த்த வரை குடும்ப பிரச்சனைகளுக்கு காரணமே இந்த  பொண்ணு பெத்த அம்மா-அப்பாவாகதான் இருக்காங்க...  செல்லமாக வளர்ந்த தன் மகளை ஒரு சொல் கூட சொல்லவிடாது , கணவன் மனைவிக்குள் ஈகோவை உருவாக்குவதற்கு பெற்றோர்களே முக்கியகாரணமா இருக்காங்க...  இப்படிதான் செல்லமாக வளர்ந்த என் உறவு பெண், தன் அம்மாவிடம் முறையிடுகிறாள்...

பொண்ணு- அவர் துணியெல்லாம் நானே தொவைக்கவேண்டியிருக்குமா

அம்மா- அதுகளுக்கெல்லாம் துணி தொவைச்சு போடவா உன்ன கட்டிகொடுத்தேன்...  

(ஆமியாக இருந்தால் - அப்பன்னா வாசிங் மெஷின் வாங்கி கொடுமா... # கருத்துல கண்ணா இருக்கோணும் :-)))

பொண்ணு- காலைல போனா நைட் தான் வராரு.. நானே எல்லா வேலையும் பாக்க வேண்டியிருக்கு

அம்மா- நீ என்ன வேலைக்காரியா டீ?? இதென்ன கொடுமையா இருக்கு..

(ஆமியாக இருந்தால்- அப்பன்னா ஒரு வேலைக்காரப்பொண்ணு  அனுப்புமா... # நாங்களாம் ஆரு :-)))

___________________________

இப்படிதான்... தன் அம்மாவிடம் தன் குறைகளை சொல்ல போக அவர்களோ அதை பெரிதாக்கி  5 வருடங்கள் கழித்து டைவர்ஸில் வந்து முடிச்சு வைக்கிறாங்க சுவாகா!!! 

சரி கருத்துவேறுபாடு பிரிஞ்சுட்டாங்க.. அதன் பின் அப்பெண்ணுக்கு மறு வாழ்க்கை இருக்கு..இல்லைன்னு சொல்லல...  "இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ, இப்ப அம்மா அப்பா பாத்துப்பாங்க. அவங்க காலத்துக்கு பிறகு உன் நிலை? உன் குழந்தை நிலை? உன் பாதுகாப்பு? ன்னு கேள்வி அடுக்குனா  நம்மல ஏற எறங்க பாக்குதுங்க (மறுமணம் தீண்டாமை செயலோ? அட கூறுகெட்ட பக்கிகளா.....)

என்னமோ போங்க! ஆங் என்னன்ன இந்த பதிவுல சொல்லியிருக்கேன்?? சுருக்கமா சொல்லிடுறேன்...

1. சொல்வதெல்லாம் உண்மை - மீடியா குடும்ப பிரச்சனையை தீர்க்குமா இன்னும் விரிசலை ஏற்படுத்துமா?

2. நாட்டாம தாத்தா - இப்பலாம் அனுபவமுள்ள பெரியவங்க நம் பக்கத்தில் இல்லாததால நம் குடும்ப பிரச்சனைகளை நம்மால் எளிதில் தீர்த்துக்க முடியல... சாதாரண பிரச்சனையையும் இடியாப்ப சிக்கலாக்கிடுறோம்.

3. பிரச்சனைக்கு யாரு காரணம்-  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், தெளிவற்ற பெற்றோர்களின் ஆலோசணைகள்...

தீர்வு- பெற்றோர்களே... கல்யாணம் பண்ணி கொடுத்ததோட உங்க வேலை முடிஞ்சுடுச்சு... தயவு செய்து ஒதுங்கி வேடிக்கை மட்டும் பாருங்க! தடுக்கி கீழ விழுந்தா அவங்களா எந்திரிக்கட்டும்... விட்டுதள்ளுங்க....

குளிக்குள் தள்ளப்பட்டால் மட்டுமே நீங்க என்ட்ரி கொடுங்க!  பெற்றோர்கள் ஒதுங்கியிருந்தாலே பல பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி கிடைக்கும்....

முற்றுப்புள்ளி :-)))))

, ,

நிரூபனுக்கு,

பெரும்பாலும் மடல்கள் என்றால் தம்பி, சகோதரன் என தான் ஆரம்பிக்கும் இல்லையா? சாரி..இப்பலாம் உங்களை அப்படி கூப்பிடுவற்க்கு மனம் வரவில்லை. ..

சமீபகாலமா உங்க கமென்ட்லாம் பாக்கும் போது நீங்கள் மனக்குழப்பத்தில் இருக்கிறீர்களோ என எண்ணத்தோன்றுகிறது. ஏன்னா நீங்க வெளிநாட்டுக்கு போனதுல இருந்தே உங்க செயல்கள் எல்லாம் கொஞ்சம் இல்ல...ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது!

போகட்டும். அது எனக்கு தேவையற்ற விஷயம். ஆனால் விரைவில் மனக்குழப்பத்தில் இருந்து விடுபட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்தவளாக இம்மடலை தொடர்கிறேன்.

பதிவர் சந்திப்பில் மது பற்றிய மனிதாபிமானி பதிவில் அனைவரும்  இருபிரிவுகளாக பிரிஞ்சாங்க. 1. மதுவை ஆதரிப்போர். 2. மதுவை எதிர்ப்போர்.  ஆனால்  உங்களின் நிலைப்பாடோ, "கூட்டத்தில் எதையாவது சொல்லி சர்ச்சை உண்டாக்குவோம்" என்பதாகவே இருந்தது! அதன்படிதான் சில பதிவுகளில் இஸ்லாமிய பெண்கள் பதிவர் சந்திப்பு போகக்கூடாது என தான் இந்த மனிதாபிமானி சர்ச்சை ஏற்படுத்துகிறார் என சொல்லியிருந்தீர்கள். 

வெடிகுண்டு போடப்பட்ட 5வது நிமிடம் தலைப்புச்செய்திகளில் 'இன்ன அமைப்பினர் வெடிகுண்டு வைத்ததாக பொறுப்பேற்றார்கள்' என்று வருமே?! அதைவிடவும் மட்டமாக வதந்திபரப்புனீங்க. நீங்க சொன்னதையும் "ஓ இதான் செய்தியா" என்பதுபோல் சிலர் கமென்ட் போட்டது தான் உச்சக்கட்ட காமெடி!

என்னை தடுப்பது அவர்களின் நோக்கமாக இருந்தால் இருக்கவே இருக்கு என் கணவர் போன் நம்பர்,ஜீமெயில்,பேஸ்புக், கூகுள் +!  என் அண்ணா ஹைதர் அலி மூலமாக என்னை தடுக்கலாம்... இதெல்லாம் விட்டுட்டு சர்ச்சையை உண்டாக்குவதால் எப்படி என் வருகையை தடுக்க முடியும் என உங்களூக்கு ஆமாம் சாமி போட்டவர்கள் கூட யோசிக்கவில்லை! பலே..பலே... நீங்க பலரையும் காமெடிபீஸாக்கியிருந்தீங்க! உங்கள் திறமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்... ஏமாறுபவர்கள் இருக்கும் வரை உங்கள் பணி தொடரட்டும்!

உண்மை என்னன்னா, நான் வருவது சில இஸ்லாமிய பதிவர்களுக்கு தெரியும், இந்த சர்ச்சைகளால் நான் வருவதற்க்கு யோசித்த போது அவர்கள் தான் ஊக்கம் கொடுத்து வரச்சொன்னவர்கள். அவர்களில் யாரேனும் ஒருவர் நீங்கள் வருவதை பரிசீலியுங்கள் என்று சொல்லி இருந்தால் கூட நான் வந்தே இருக்க மாட்டேன். அப்படி பட்டவர்களின் மீது அவதூறை அள்ளி வீசினீர்கள்...

சரி முடிஞ்சது முடிஞ்சு போச்சு! பதிவர் சந்திப்பிலும் கலந்து உங்கள் முகத்தில் கரியை பூசிவிட்ட திருப்தியில் அமைதியா இருந்தா... இப்ப மீண்டும் என்னன்னமோ உளறிட்டிருக்கிறதா சொன்னாங்க.

எனக்கு இஸ்லாமிய பெண்மணி தளத்தில்  எழுத விருப்பமில்லை எனவும், என்னை கட்டாயப்படுத்தி எழுத வைக்கிறாங்கன்னும் என்னன்னமோ சொல்லிட்டிருக்கீங்க. அப்படி எத்தன பதிவுதான் அங்கே போட்டிருக்கேன்னு எட்டியாவது வந்து பாத்திருக்கீங்களா??!! அதுல மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் எழுதிட்டு வராங்க எனவாவது தெரியுமா???  23 பதிவுகளில் என் போஸ்ட் மொத்தமே 2 தான்!

என்னை தவிர எல்லா பயபுள்ளைகளும் வீடு ஆபிஸ்வேலைன்னு பிசியா இருக்குறதுனால திரட்டிகளில் இணைக்கிறது, பேஸ்புக்கில் சேர் செய்றதுன்னு எல்லாவேலைகளையும் என் சுயவிருப்பத்தின் பேரில் செய்துட்டிருக்கேன். என்னால் ஆரம்பிக்கப்பட்ட தளம் பிரபலமாக்கப்பட வேண்டும் என்ற சுயநலமும் தான்!

என்னவோ  என்னை சுத்தி பத்து பேரு பெல்ட் வச்சுக்கிட்டு "எழுது எழுது" என அடிக்கிற மாதிரியும், நான் அழுதுட்டே இஸ்லாமிய பெண்மணியில் எழுதுற மாதிரியும்... என்னே உங்கள் கற்பனை திறன்!?! சத்தியமா போலி வதந்தி பரப்பும் வித்தையையும், மற்றவர்களை ஏமாற்றும் திறமையையும், ஈடு இணையற்ற கற்பனை வளத்தையும்  உங்க கிட்டதான் பிச்சை எடுக்கணும் நான்...

அததுக என்கிட்ட எதாவது விஷயம் சொன்னா பட்டுன்னு பேசிடுவேன்னு  பயந்துட்டிருக்குதுங்க! அப்பாவி பெண்ணாம், மிரட்டுறாங்களாம்... என்னய்யா கலர் கலரா ரீல்லு விடுறீங்க!!!!

பதிவுலகில் என்னவேண்டுமென்றாலும் எழுதி தொலைங்க. அனாவசியமாக என் உழைப்பை கொச்சைப்படுத்தாதீங்க!


பதிவுலக தத்துவம் :  உங்கள் எழுத்தின் தரத்தை வைத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் மதிப்பும் நிர்ணயிக்கப்படுகிறது!

, , ,

உறவை முறித்து சென்ற பின்னும்
உன்னுள்ளத்தில் தொடரும்
என்னைபற்றிய  நினைவுகள்

பிரிவின் தனிமையில்
அவஸ்தைகளை எண்ணி
புழுவாய் துடிக்கும் உன் வேதனைகள்!


எங்கேனும் என் பெயரைக்கண்டால்
நான்தானோ என
வைராக்கியத்தை எறிந்து ஆராயும் உன் பார்வைகள்

எதார்த்தமாய் அமையும் சந்திப்புகளில்
கோபம் மறந்து உதிர்க்கும்
உன் நல விஷாரிப்புகள்

உன்னையும் அறியாது
உன்னில் அவ்வபோது எழும்பும்
என்னை நோக்கிய  சிந்தனைகள்!

என்ன நேர்ந்தபோதும்
அவளைவிட்டு விலகியிருக்க கூடாதென
என்றேனும் என்னையெண்ணி
நீ விடும் கண்ணீர் துளிகள்!

அடடா...
பிரிவும் இனிக்குதடா!
தனிமையையும் சுகமாக்கினாயடா...

டிஸ்கி- மாசத்தொருக்காவாவது பதிவு போடலன்னா பிரபலபதிவர்ன்னு ஒத்துக்க மாட்டாங்களாம்(அஹ்ஹூ...அஹ்ஹூ)-  காணாமல் போன கனவுகள் ராஜிக்கா கொடுத்த டிப்ஸ் :-)) அதுக்காக பேஸ்புக்கில் போட்ட அழுவாச்சி காவியத்தை லேசா டிங்கரிங் பண்ணி இங்கேயும் போட்டிருக்கேன் :-))))

, ,

பல 'எதிர்'பார்ப்புகளோடு தொடங்கிய பதிவர் சந்திப்பு மனநிறைவுடன் நடந்துமுடிந்தது! அதில் நானும் கலந்துகொண்டேன்.... ஒருவாரம் ஆகியும் இன்னும் பதிவர் பற்றிய நினைவுகள் நீங்கவில்லை.. 
சேமித்துவைக்கும் பொருட்களோடு பீரோவில் பத்திரமாய்....
சென்னை என்பதால் வருவதற்கு பெரிய சிரமம் எதுவும் இருக்கவில்லை. ரம்ஜானுக்கு சென்னை செல்லவேண்டி இருந்தது சில காரணங்களால் தடைபட்டது! ரம்ஜானுக்கு சென்னை சென்றிருந்தால் நிச்சயம் பதிவர் சந்திப்பில் கலந்திருக்க முடியாது. ஏனெனில் ஒருமாதம் முன்பே ட்ரைனில் டிக்கெட் முன்பதிவு செய்து 25 சனிகிழமை இரவு ரிட்டன் போட்டிருந்தேன்...  அது கேன்சல் ஆக பதிவர் சந்திப்புக்காவது போய்விட்டு வரலாம் என மீண்டும் 25 இரவுக்கு டிக்கெட் போட்டால் வெயிட்டிங் லிஸ்ட் கிட்டதட்ட 90க்கு மேல்! போட்டும்விட்டேன்!

பின் மனிதாபிமானி தளத்தில் என் கமென்ட் பார்த்து சிவா என்னிடம் "உங்கள் சகோதரன் மேல் நம்பிக்கை இருந்தால் வருவீங்க" என சொல்ல.... சிவா சொன்னதற்காகவே வர முடிவுசெய்தேன்! :-)  சாதிகா அக்காவிற்கு போன் செய்து  கலந்துக்கொள்ளவிருப்பதை சொல்ல, அவர் வீட்டுக்கு நேரடியாக வர சொன்னார்...

அங்கே சென்றால் எனக்கு முன்பே லெட்சுமி மாமி இருந்தாங்க! ஒன்றாகவே மண்டபம் சென்றோம்! இதாங்க நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டதன் பின்னணி வரலாறு! இதுவே இவ்வளவு நீளம்னு கடுப்பாய்ட்டீங்களா... கூல்...கூல்... இனி அங்கு நடந்த சுவாரசிய நிகழ்ச்சிகளை பார்க்கலாம்!

சாதிகா அக்கா வீட்டில் காலை சாப்பாடு முடிச்சதும் கிளம்ப தயாரானோம். சிராஜ்ஜிற்கு போன் போட்டு 9 மணிக்கு மண்டபம் வந்துடுவோம் என சொல்ல அவரோ, "பத்துமணிக்கு மேலதானே பங்க்‌ஷன்? ஏன் சேர் கிடைக்காதுன்னு துண்டு போட்டு எடம் பிடிக்க போறீங்களா? அதெல்லாம் நிறையாவே போட்டிருப்பாங்க! விழால முக்கியமான ஆளு... நானே இன்னும் போகல" என சொல்லி முதல் பல்பு கொடுத்தார் (அட ஆண்டவா... இவருக்கு மட்டும் கொழுப்பை நாக்குல மொத்தமா வச்சு படைச்சுட்டீயா?)
ஷிவா ப்ளாக்கில் சுட்டது
மண்டபத்திலிருந்து காரில் இறங்கிய உடனே வாசலில் வரவேற்க கசாலி அண்ணா, சங்கவி, சிவா இருந்தார்கள்! 3 பேருமே ஒன்றாய் சேர்ந்து வரவேற்க, சிவாவிடம் என்னை தெரிகிறதா எனக்கேட்டேன். அவர் தெரியாதே என ஒரே வார்த்தையில் பிரகாசமான பல்பு கொடுத்தார்! பின் நாந்தான் ஆமினா என அறிமுகம் செய்தேன்.  அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் அதே கேள்வியை திரும்ப கேட்க  அவரும் தெரியாது என்றார்! சரி இவன் தான் ஷாம்...இப்பதெரியுதா என கேட்க அப்பவும் தெரியாது என்றார்! (எல்லாரும் சொல்லி வச்சு பல்பு கொடுக்க முடிவு பண்ணீட்டீங்களா அவ்வ்வ்)  நேத்துவரைக்கும் தங்கச்சி, மருமகன்னு பேசிட்டிருந்தீங்களே சாட்ல! அந்த குட்டிசுவர்க்கம் ஆமினா சத்தியமா நான் தான் என சொல்லினேன்! விட்டா அழுதுருப்பேன்!

இனி யார்கிட்டையும் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணேன் ஹி..ஹி..ஹி... அந்த நேரம் பைக்கிலிருந்து பறந்துவந்தாரு டீக்கடை ஓனரு சிராஜ்... ( நீங்கதான் விழால முக்கியமான உறுப்பினராக்கும்??!! இதான் உங்க டக்கா?) எண்ணங்களுக்குள் நான் பாரூக் அண்ணாவை அழைத்துவந்து கசாலி அண்ணா என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார். முன்பே அவருடன் பேசியிருந்தாலும் ஸ்ட்ரைட்னிங் முடி அடையாளம் காட்ட மறுத்துவிட்டது :-)
ஷிவா ப்ளாக்கில் சுட்டது
வாசலிலேயே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து  பின் அரங்கத்திற்கு செல்ல கிளம்பினோம். மாடி ஏறியதும் அங்கே பெயர் பதிவு செய்துக்கொண்டிருந்தார்கள். ஐடியை ஷாம் சட்டையில் மாட்டிவிட்டேன் :-)

அப்போது பட்டிக்காட்டான் ஜெய் பெரிய வணக்கம் போட்டு நீங்க தானே ஆமினா என்றார் (அட்ரா...அட்ரா.... சந்தேகமே இல்லாம நீ பிரபலபதிவர் தான் ஆமினா! இதுக்காகவே தனியா ஒரு பதிவு போட்டு உங்கள பாராட்டுறேன் ஜெய்! ).. சூரியன் எப்.எம் ல வேல பாத்தாரு போல... மூச்சு விடாம பேசினாரு!  கேமரா, விடியோ, ரூல்ஸ் என அனைத்தையும் ஒவ்வொன்றாய் விளக்க, பெண்பதிவர்களுக்காக, அவர்களின் விருப்பம், பாதுகாப்பிற்காக  இவ்வளவு ஏற்பாடா என வியந்து நின்றேன்!
என் சார்பில் அடையாள அட்டை போட்டுக்கொண்டான் :-)
எங்களுக்கு முன்பே ராஜி, சசிகலா, சரளா அனைவரும் இருந்தார்கள். ஷாம் ஐடியை பார்த்ததும் தூயா "இதுவரைக்கும் நான் தான் குட்டிபதிவர்ன்னு நெனச்சேன்! என்னை விட குட்டிபதிவரா இருக்கியேன்னு கலாய்ச்சாங்க!
பின்னூட்டப்புயல் சேக் தாவூத் உடன்
சேக்தாவூது எனக்கு டீ கொண்டு வந்து கொடுக்க, அப்ப என் மகனுக்கு என சண்டை போட்டேன் ;-) (டீயா இருந்தாலும் எங்க பங்கை விட்டுகொடுக்க மாட்டோம்ல?? அவ்வ்வ்வ்வ்வ்)
பார்த்த மாத்திரத்தில் அனைவர் மனதிலும் பதியகூடிய நபர் வல்லிம்மா
வல்லி அம்மா அனைவருக்கும் பூவும் குங்குமமும் கொண்டு வந்திருந்தார். பூமேல் என்னமோ ஆசை இருப்பதில்லை...   கிட்டதட்ட பூ சூடி 5 வருடங்களூக்கும் மேல் ஆகியிருக்கும்..  யாராவது கொடுத்தாலும் வேண்டாம் என சொல்லிவிடுவேன்.. ஆனால் வல்லிம்மா கொடுத்த போது வேண்டாம் என சொல்ல மனம் இல்லை.. இத்தனைக்கும் வைப்பீங்களா என தான் கேட்டார்! வைப்பேன் என்றேன்! அவர் முகத்தில் இருந்த காந்த ஈர்ப்பு அப்படி சொல்ல வைத்ததோ என்னவோ... கண்ணா என அழைத்தே அனைவரிடமும் பேசினார். விடைபெறும் போது கட்டிதழுவி நீண்டநாள் பழகிய நெருங்கிய உறவினர் போன்ற உணர்வை ஏற்படுத்தினார். ச்ச... அம்மா கூட இன்னும் கொஞ்ச நேரம் பேசாமல் போய்விட்டோமே என நொந்துக்கொண்டேன்!

மேடையில் ஒருவர் ஏறி தமிழ்தாய் வாழ்த்து பாட அப்போது தான் தெரிந்தது அவர் மதுமதி என்று! போட்டோக்கும் நேர்ல பாக்குறதுக்கும் சம்மந்தமே இல்ல.. ஒருவேள காதலில்  தோல்வி அடைந்த சமயத்துல தாடி வளர்த்து, துன்பத்திலும் சிரி என பெரியோர்களின் வாக்குபடி சிரிச்சுட்டே எடுத்த பழைய போட்டோ போல என என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்!:-)
ஆஷிக் மற்றும் சேக் தாவூத் உடன்
தமிழ்தாய் வாழ்த்து முடிந்ததும் என்னிடமிருந்து போனவன் தான் ஷாம்! அப்பப்ப நான் இருக்கேனான்னு உறுதிபடுத்த வந்தான். மீதி நேரம் அவன் மாமாமார்களுடன் சுத்திக்கொண்டிருந்தான்! (பதிவர் ஆகுறதுக்கு இப்பவே ப்ராக்டீஸ் கொடுக்குறோமாக்கும் :-)  

பதிவர் அறிமுகப்படுத்த ஒவ்வொருவராய் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது  என்னை அழைக்க வேண்டாம் என பாலா கணேஷ் அவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் உடனே மேடையில் இருந்தவர்களிடம் தெரியப்படுத்தினார்.  அதன் பின்னும் என் பெயரை அழைக்க, நான் மேடை ஏற வரும் போதே மதுமதி மற்றும் ஜெய் விடியோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்! ( பொதுவான நிகழ்ச்சியில் படம் பிடிப்பது தவிர்க்க முடியாதது தான். ஆனால், பொறுப்பாய் இருந்து,  முடிந்தளவு அவர்கள் பெண்பதிவர்களுக்காய் மெனக்கெட்டது உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய விஷயம்! பெண்பதிவர்கள் ராணிகளாய் நடத்தப்பட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்! தனியான, சிறப்பான கவனிப்பு... இனி எப்போது பதிவர் சந்திப்பு நடத்தினாலும் கட்டாயம் வந்தே ஆக வேண்டும் என முடிவு செய்ய வைத்த விஷயங்களில் இதுவும் ஒன்று! )
அரசியல்பதிவர் கசாலி அண்ணா உடன் :-)
அதன் பின் சரக்கு,மப்பு என சில வார்த்தைகள் விடப்படும் போது விழாக்குழுவினர் முகத்தில் இருந்த கவலை மற்றும்  மேடைக்கு சென்று சிராஜ்  தொகுப்பாளரிடம் அது போல் பேச வேண்டாம் என தீர்மானத்தை உடனுக்குடன் சொன்னதுலாம் HATS OFF BROTHERS!
'தல' சுய அறிமுகத்தின் போது
பெண்களை போட்டோ எடுக்க வேண்டாம் என சொல்லியிருந்தாங்க! எந்தளவுக்கு இதை செயல்படுத்த போறாங்க என  யோசித்ததுண்டு! ஆனால் அதுக்காகவே சிவா நிறையா Chair இருந்தும்  எங்கும் உக்காரல போல அவ்வ்வ்! Sir விழா நடக்குற நேரம் முழுக்க நின்னுட்டே தான் கண்காணிச்சுட்டிருந்தார்! யாராவது போட்டோ எடுத்தா ஒடனே ஓடி வந்து தடுத்துட்டிருந்தார்...

நேற்று மதுமதியின்  ஒரு பதிவை படித்தபோது தான் புரிந்தது! அத்தனை வேலைகளுக்கும் டென்ஷன்களுக்கும் மத்தியிலும் மதுமதி அனைவரிடத்திலும்  புன்னகை பூக்க பேசியது ரொம்பவே ஆச்சர்யப்பட வைக்கிறது!  சாப்பிட போகும் ஒவ்வொருவரிடமும் நலம் விஷாரித்து பேசிக்கொண்டிருந்தார். சாப்பிட்டதும் விழாவை பார்த்துவிட்டுதானே செல்வீர்கள் என சொன்னபோதும், கட்டாயமாக இருப்போம் என சொன்னபோது அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்  அவரின் பொறுப்பான வழிநடத்தலை காமித்தது! (நீங்களாம் கல்யாணத்துக்கே பந்தி வைக்கிற டைம்ல போற ஆளுன்னு அவருக்கு தெரிஞ்சுக்கு போல! அதான் கேட்டிருக்கார்....)
ஐஸ் சாப்பிட்டுவிட்டு வந்த போது :-)(வீடுதிரும்பல் ப்ளாக்கில் சுட்டது)
ராஜியின் மகனுடன் ஷாம் ரொம்ப நல்லா ஒட்டிக்கிட்டான். ராஜி  கடைக்கு அழைத்து சென்று ஐஸ்க்ரீம் வாங்கி கொடுக்க ஷாம் "எங்கம்மாகிட்ட பெர்மிஷன் கேட்கணும்" என்றானாம். சரி கைல வச்சுக்கோ என ராஜி சொல்ல, ராஜி கையில் இருந்த ஐஸ்க்ரீம்மை பறித்து சாப்பிட்டானாம்...  (நாங்களாம் இப்பவே இப்படின்னா பாத்துக்கோங்க! ) ராஜி சும்மா பம்பரம் மாதிரி சுத்திட்டே இருந்தாங்க... பலர் கூச்சம் துறந்து சகஜமாய் பேசிபழகியதற்கு இவரின் அணுகுமுறை முக்கியக்காரணம்னு சொல்லலாம். பலரிடம் தானாகவே சென்று பேசி அறிமுகம் செய்து நீண்டநாள் பழகியவர் போல் நடந்துக்கொண்டார். 
மனிதாபிமானி(ஹி..ஹி..ஹி...) சுய அறிமுகத்தின் போது!
பதிவர் அறிமுகம் முடிந்து, சாப்பிட கூப்டும் போக மனமில்லாமல் பேசிக்கொண்டே இருந்தோம். கசாலி அண்ணா மொபைலில் இருந்த என் மருமகன்  Rizal Ahamed விடியோக்களை ஒவ்வொன்றாய் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் அண்ணாவை சாப்பிட கூப்டு நான் அடம்பிடிச்ச போது நான்வெஜ் தான்  சாப்பிடணும்னு அடம்பிடிச்சார் :-)

சிபியிடம் சாதிகா அக்கா பதிவுலக 'மொய்க்கு மொய்' பற்றி பேசும் போது "சிபி கூட என் ப்ளாக் வரதில்லைன்னு அவரை மடக்கினேன்" ( எங்கே போனாலும் ப்ளாக்கிற்கு ஆள் திரட்டுறதுல குறியா இருப்போம்ல அவ்வ்வ்)
சிராஜ் கையில் தூக்குவாளி... (நோ உள்குத்து:-)
வீட்டில் பங்க்‌ஷன் என்றால் உறவினர்கள் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து கடைசி பந்தியில் தான் சாப்பிடுவோம். எங்களுக்கு பரிமாறுவதும் எதாவது ஒரு நெருங்கிய உறவினராகவே தான் இருப்பார். இந்த சந்திப்பிலும் அப்படியே... சிராஜ் மற்றும் கசாலி அண்ணா சாப்பாடு பரிமாறுனாங்க!  ஷாம்க்கு தனியாக இலை போட்டு சாப்பிடு வைக்கப்பட்டது! ஒடனே அங்கே வந்த சிவா, "இன்னைக்கு நீ யார் முகத்தில் முழிச்ச ஷாம்? இந்த நாள் உனக்கு அதிஷ்ட்ட நாள் டா. உங்கம்மா சமையல்ல இருந்து தப்பிச்சுட்ட என இன்னொரு பல்பு கொடுத்தார்! அருகில் இருந்த கசாலி அண்ணாவிடம் "போஸ்ட்டர்க்கு பசை வேணும்னா  ஆமினாவின் சாம்பார் சாதம் சரியா இருக்கும்" என பல்பு மேல் பல்பு கொடுத்தார்! அவ்வ்வ்வ்வ்வ்
ஷாம் இலையில் எதுவும் இல்லாதாதுக்குகாரணம் அருகில் அமர்ந்திருக்கும் மாமாமார்கள் :-)
பின் ஷாம் சாப்பிட மறுக்க, சாப்பாட்டை வேஸ்ட் பண்ண கூடாது என்று  அவன் இலையில் உள்ளதெல்லாம் அவன் மாமாமார்ங்க ஆஷிக்,சேக்தாவூத் சாப்பிட்டாங்க :-) சாப்பாடு செம டேஸ்ட். ஆயிரத்தில் ஒருவன் சகோ.மணியிடம்  நேரடியாகவே ஆஷிக் மற்றும் சேக் பாராட்டுனாங்க! சாப்பிட்டு முடிஞ்சதும்  சிவா,சிராஜ் க்ரூப் சாப்பிட  ஆஷிக் மற்றும் சேக் பரிமாற போயிட்டாங்க!  அகில உலக புகழ் பெற்ற இலையை தலைகீழா மடிச்ச சர்ச்சை இங்கே தான் நடந்துச்சு ஹி...ஹி..ஹி...

ருக்மணி அம்மா, ரஞ்சினி அம்மா, சீனா ஐயா, தமிழ்வாசி ப்ரகாஷ், எல்.கே  உடன் பேசிவிட்டு அரங்கத்திற்கு சென்றால் யாரோ ஒருவர் மேடையில் அமர்ந்திருந்தார்!

காலை முதல் ஒவ்வொரு பிரபலபதிவரையும் கூட இவர் யார் இவர் யார் என நான் கேட்க, இவர் தான் கேபிள் சங்கர், இவர் தான் சுரேகா, இவர் தான் ஜாக்கி என சொல்லி சொல்லி சோர்வடைந்த சாதிகா அக்காவிடம் மேடைல இருக்காரே இவர் யாருக்கா என கேட்டது தான் உச்சகட்டம்!  அடக்கொடுமையே.. இவர்தான் பட்டுகோட்டை ப்ரபாகர் என சொன்னார்! ஓ இவர்தானா என வழிந்துக்கொண்டேன் அவ்வ்வ்வ்... 
பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பீச் பார்த்துட்டுதான் போகணும் என சாதிகா அக்கா சொல்லியிருந்தாங்க. பட்  அக்கா வேறெங்கோ செல்லவேண்டியிருந்ததாலும், காலையிலேயே  வந்துவிடுவேன் என என் உறவினர்கள் காத்துக்கொண்டிருந்ததாலும் உடனே செல்லவேண்டியதாகிவிட்டது! புத்தகவெளியீடு முடிந்ததும் கிளம்பிவிட்டோம்! ஆனாலும் போக மனமே இல்லை! ருக்மணி அம்மாவிடம் விடைபெற அவர்கள் கை பிடித்து பேசினாங்க... ஷாம் தலையை தடவி வாழ்த்து சொன்னாங்க!

சிவாவிடம் விடைபெற்ற போது வாசல் வரை வழியனுப்ப வந்தார். கூடவே  கறிவேப்பிலை சாதம் (சிவா கமென்ட் பார்க்க) பற்றிய பஞ்சாயத்து வைத்தார். நாட்டாமை கசாலி அண்ணா தான்!  அண்ணாவை நைஸாக நான் மிரட்ட  கறிவேப்பிலை, கருவேப்பிலை 2மே சரிதான் என தீர்ப்பு சொன்னார் :-)

மண்டபத்தின் கீழே வரை வழியனுப்ப சிவா, சிபி, சேக், கசாலி அண்ணா வந்திருந்தாங்க...  அப்போது சிபி என்னை பார்த்து "என் பதிவுக்கெல்லாம் இனி வந்து ஓட்டு போடலன்னா உங்க பதிவுக்கெல்லாம் மைனஸ் ஓட்டு போடுவேன்"ன்னு மிரட்டினார்! என் ப்ளாக்ல கமென்ட் போடலன்னா நானும் மைனஸ் ஓட்டு போடுவேன்னு பதிலுக்கு டீல் பேசினேன் அவ்வ்வ்வ்வ்

 இறுதிவரை வழியனுப்ப இவர்கள் வந்தது  உண்மையிலேயே நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சென்றுவந்தது போன்ற உணர்வை தந்தது! மொத்தத்தில் இது சத்தியமா பதிவர் சந்திப்பே இல்லை! குடும்ப உறவினர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்! அங்கும் கூட கேட்டரிங் ஆட்கள், வரவேற்க வாசலில் பொம்மை என எல்லாமே அந்நியமாய் தெரியும்.. ஆனால் இந்த சந்திப்பிலோ வாசலில் வரவேற்க , ஜூஸ், டீ கொடுக்க, சாப்பாடு பரிமாற, சாப்பாட்டின் நடுநடுவே என்ன வேண்டுமென கேட்க, ஜாலியாய் பேச என எல்லா வேலைகளுக்கும் பதிவர்களே செயல்பட்டு "நாமெல்லாம் ஒரே குடும்பத்தவர்கள்" என்ற உணர்வை ஏற்படுத்தியது!

விழாக்குழுவனருக்கு,
மனமார்ந்த பாராட்டுக்கள்! பல விஷயங்களில் சபாஷ் போட வைத்தீர்கள்...  ஒவ்வொரு விஷயங்களிலும் உங்கள் திட்டமிடல்  அடுத்தமுறையும் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டியது! சூப்பர் சகோஸ்! இந்த திருவிழாவில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்வான தருணங்களாக மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்!

டிஸ்கி :       2 பதிவா போட நெனச்சேன் :-) மக்கள் கத்துவாங்க என்பதால் ஒன்னா போட்டுட்டேன்! விடாம படிச்சுருங்க! அப்பப்ப கேள்விகேட்டு மடக்குவேன் :-))))

, , ,