ஹாய் மக்கள்ஸ்...

ச்ச.. பிரபலமாகிட்டாலே ரொம்பா பேஜாராக்கீது... :-)))))) இதுலவேற இந்த சர்மிபொண்ணு  "நியூஸ் பேப்பர் பார்த்தீயா? அந்த செய்தி பத்தி பதிவு போடு, ஆனந்த விகடன்ல வந்த கட்டுரை பாத்தீயா? அது பத்தி பதிவு போடு"ன்னு எக்கசக்க ப்ரஷர்... (நம்மல இன்னுமா உலகம் நம்புது.. சரி நீயே ஒரு கட்டுரை எழுதி தாயேன் என் ப்ளாக்ல போடுறேன்னு சொன்னா, போன் போட்டு நான்-ஸ்டாப்பா அர்ச்சணை கொடுக்குறா! (எங்கக்காக்கு என்னா தெறம என்னா தெறம.. திட்டும்போது கூட எதுகை மோனைலாம் பாலோ பண்ணுறா :-)

சரி சர்மிளாவுக்காக பதிவு போடலாம்னு யோசிச்சா 'காத்திரமான பதிவு' எதுவும் இப்போதைக்கு  பொறிதட்டல..  சோ உங்கள் துரதிஷ்ட்டம்... குட்டிசுவர்க்கத்தில் இன்னுமொரு மொக்கை பதிவு :-)
________

ஒருமுறை  நான்பாட்டுக்கு அமைதியா (?! இத எழுதும் போது எனக்கே சிரிப்பு வருது பாஸ்ஸூ) இருந்தேனா.. அப்ப இந்த மெட்ராஸ்பவன் சிவா சாட்ல வந்தாரு! 

சிவா- How r u madam?

ஆமி- ஓ நல்லாயிருக்கேனே!

சிவா- enna saappaadu innaikku

ஆமி- ப்ரைட் ரைஸ்

சிவா - bright rice? surf'la wash pannadhaa?

ஆமி- அய்யே...

சிவா- உங்க சமையல் எக்ஸ்ப்ரஸ்ல வந்த குறிப்புகளை செய்து பார்த்த  பல குடும்பதலைவிகள் மோசமான நிலையில் இருக்குறதாக தகவல் வந்துச்சு

ஆமி- (கோபமாக) இனி நான் சமையல் பத்தி பதிவே போட மாட்டேன்..விடுங்க!

சிவா- (கூலாக) இந்தியாவுக்கு கிடைச்ச 2வது சுதந்திரம்

ஆமி- க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

(பயபுள்ளைக எவ்வளவு வெறுப்பா இருக்குதுங்க:-)
_____

ஷாம் பலநேரங்களில் பொறுப்பாய் நடந்துக்கொள்வான். அவனின் பெரியமனுஷத்தனமான வார்த்தைகள் கேட்கவே ஆசையாக இருக்கும். என் அம்மாவிற்கு ஒருமுறை  இருதயவலி ஏற்பட அம்மா சோர்ந்திருப்பதைப் பார்த்து  ஷாம் என் அம்மாவிடம் "கவலப்படாதம்மா... அல்லாஹ் இருக்கான்... ஷாம் இருக்கேன்.. ஒன்னுமாகாது" என்றான் இரண்டு வயதில்...

இந்த சம்பவத்தை மனசுல வச்சுக்கிட்டு நானும் ஷாம்மிடம் சொன்னேன்...
ஆமி- ஷாம்! அம்மாக்கு ரொம்ப  தல வலிக்குதுடா

ஷாம்- கம்யூட்டர் பாரும்மா சரியாகிடும்!

ஆமி- ???!!!!????!!!???!!!
(நம்மள பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கானோ :-)

________________

நேற்று டீக்கடை குழுமத்தில் தம்பி இர்ஷாத்தும், தம்பி ஹசனும் என்னை கலாய்ச்சுட்டிருந்தாங்க.... ஒரு கட்டத்தில் ஒரு சகோதரி "ஆமினா ஏற்கனவே காரமா இருக்காங்க..ஏன் மேலும் கோபப்படுத்துறீங்க"(அவ்வ்வ்வ்) என கேட்க
இர்ஷாத்- ஆமினா அக்கா கோவமே படமாட்டங்க... இல்லக்கா :-) சும்மா விளையாட்டுக்கு ஆமினா அக்கா!

ஹசன் -வேணாம் இர்ஷாத்!  ஆமினா அக்காவுக்கு கோபம் வராது.. வந்துச்சுசுசு............ அவ்ளோ காமெடி-யா இருக்கும். :)

(நம்ம டெரர்ரா இருந்தாலும் பயபுள்ளைக நம்பமாட்டேங்குதுகளே... வா டூ டூ டூ டூ டூ....................)

________________

ஒரு மாலைபொழுது.. மொட்டை மாடியில் அம்மா மடியில் படுத்துக்கொண்டே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். என் மேல் ஷாம் படுத்துக்கொண்டே வானத்தை பார்த்துக்கொண்டிருந்தான்... நீண்ட நேர வானியல் ஆராய்ச்சிக்கு பின் அம்மாவிடம் நான்...

ஆமி- ஏன் மா... முன்பெல்லாம் சாயங்கால நேரம் மாடியில் இருந்தால் கூட்டுக்கு திரும்ப எக்கசக்க பறவைகூட்டம் போகும்... பாக்கவே கொள்ள அழகா இருக்கும்.. இப்பலாம் அதுமாதிரி வரதில்லையே..

அம்மா- குருவிக்காரனுங்க எல்லாத்தையும் சுட்டுட்டானுங்க போல

ஆமி- ஙே... :( கேள்விகேட்டா ஒழுங்கா பதில் சொல்ல தெரியுதாம்மா உனக்கு.... போ மா!!


உடனே ஷாம் என்னிடம்...

ஷாம்- ஏன் ஆனி.. அந்த மூன் அன்னைக்கு பெரிசா இருந்துச்சுல? இப்ப ஏன் பாதியா இருக்கு... ஏன் இப்ப மட்டும் ஒயிட் கலர்ல இருக்கு? அன்னைக்கு எல்லோ கலர்ல தானே இருந்துச்சு!

ஆமி- அதுவா.. அது அப்படிதான் டா...

அம்மா செம கோபத்தோட என்னை முறைத்துவிட்டு,  திட்டின கதையெல்லாம் இங்கே வேணாமே அஹ்ஹூ அஹ்ஹூ:-)

டிஸ்கி : இனி ஆராச்சும் என்னை பதிவு போட சொல்லுவீங்க... மொக்க போட்டே கொலபண்ணிடுவேன் ... ஜெய்லானி  இஸ்கூலில் படிச்சவங்களாக்கும்:-)

, , ,