உலகில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள்........
ரமலானில் நீங்கள் செய்த நன்மைகளுக்கு ஏக இறைவனிடம் பன்மடங்கு கூலி கிடைக்கவும்,  மேலும் மேலும் வாழ்வில் முன்னேற்றங்களும் செழிப்புமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக ஆமீன்
என்னன்ன சமைக்கலாம்னு என்னை மாதிரி முடிவெடுக்காம நிறைய பேர் இருப்பீங்கன்னு தெரியும்.  என்ன குழம்பு வைக்கலாம்னு  குழப்பமா இருக்குன்னு குழம்பியிருக்குறவங்களுக்காக சில மெனுக்கள் இருக்கு. செய்து அசத்துங்க  :-) அதுக்கப்பறம் பெருநாளைக்கு உங்கள யாரும் சமைக்க சொல்லவே மாட்டாங்க...ஹி...ஹி...ஹி.....

சாத  வகைகள்
திண்டுக்கல் பிரியாணி
சிக்கன் பிரியாணி (எளிய முறை)
சிக்கன் பிரியாணி (லேயர் முறை)
வெஜ் பிரியாணி
குஸ்கா
தேங்காய் பால் சாதம் (எளிய முறை)

குழம்பும் கறியும்
தாளிச்சா
கல்யாண தாளிச்சா
எள்கத்திரிக்காய் க்ரேவி
பெப்பர் சிக்கன்
தேங்காய் கறி
 ஆந்திரா சிக்கன் கிரேவி

ஏதோ இப்போதைக்கு என்னால முடிஞ்சது ;-) அதுனால அதிகமா கொடுக்க முடியல.....:-))

முக்கிய குறிப்பு :-))
ஒரு பத்து நாளைக்கு என் கடைக்கோ மத்தவங்க கடைபக்கமோ வர முடியாது (ஆமி பிஸின்னு சொன்னா சிரிப்பீங்களோ????...... ஆனாலும் அதான் உண்மை ஹி...ஹி...ஹி.... எல்லாரும் நல்லா கவனிச்சுக்கோங்க... நானும் பிஸியாயிட்டேன் நானும் பிஸியாயிட்டேன்). யார்கிட்டையும் நான் வம்பிழுக்கலன்னு கவலபடாதீங்கோ :-)) மொத்தமா என்கவுண்டர் பண்ணிடலாம் ஹி...ஹி...ஹி...

போன பதிவுல யார் கமென்டுக்கும் பதில் சொல்ல முடியல..... அதுனால பலபேர் சந்தோஷமா இருக்குறதா நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து வந்த சோக செய்தியை கேட்டு ஜீரணிக்கவே முடியல. அதுளையும் பத்து நாள் ஊருக்கு போறேன்னு வேற சொல்லி எஸ்கேப் ஆகலாம்னு நெனக்கிறவங்களுக்கு எல்லா வேலையும் முடிச்சுட்டு வந்து பொருமையா சண்ட போடலாம்.

நல்லபடியா பெருநாள் கொண்டாடிட்டு நல்லபடியா வந்து சேருங்க இறைவன் நாடினால் மீண்டும் சந்திப்போம்...........

, ,

ரேஷன் கார்டையும் கேன்னையும் கைல கொடுத்து மண்ணெண்ணெய் வாங்க அம்மாவின் கெஞ்சல் கட்டளை.. நானும் போனா போகட்டும்னு கிளம்பிட்டேன் (பொழுது போகாததன் காரணமேயன்றி வேறில்லை. ஆமிக்கு பொறுப்பு வந்துச்சுன்னு வரலாறு தப்பா கல்வெட்டுல செதுக்கிட கூடாது சொல்லிபுட்டேன்:-)

சின்ன வயசுல போனது. "அங்கேலாம் போனா நம்ம கௌவரம்(?) என்ன ஆகுறது????"ன்னு பேசுற ஸ்டேஜ்ல போகாமவிட்டு, ரொம்ப நாளைக்கு அப்பறம் இன்னைக்கு தான் போனேன். பெருசா எந்த மாற்றமும் இல்ல. அதே கியூ அதே விநியோகிப்பாளர்,அதே  பதிவாளர்...ஆங் அதே மொல்லமாரி தனம், அதே பிச்சைக்காரதனம்.... அதே திருட்டு தனம்..... எந்த மாற்றமும் இல்ல!!!! ( கட்சி தாவல் தடை சட்டம் மாதிரி குணம் மாறுவதற்கு தடை சட்டம்ங்குறத எல் ஐ சி பாலிஸியா வச்சுருப்பாங்களோ?

கிட்டதட்ட ஒரு மணி நேரம் வியர்வையிலும்,நெரிசலிலும், அநாகரிக ஊர் வம்பு பேச்சுக்களுக்கு மத்தியிலும்  நிற்பது உலக மகா வேதனை!! எப்படியோ 1 மணிநேரத்துக்கு பிறகாவது என் முறை வந்துச்சு.ரேஷன் கார்ட்ல பதிஞ்சதுக்கு பிறகு 43 ரூபாய்க்கான சீட்டு கொடுத்துட்டு 50 ரூபாய் கேட்டார். இதுக்கு தான் மொல்லமாரிதனம்னு பேர் வச்சது. 4 ரூபாய்  சோப்பு கொடுத்துட்டு 7 ரூபாய்ன்னு நமக்கிட்ட கணக்கு காமிச்சார்.. சரி பிச்சைக்காரன் வாசல்ல வந்தா ஒரு ரூபாய் போட்டு அனுப்புறதில்லையா? அதே மாதிரி அங்கியிருந்த 3 எருமைகளுக்கும் ஒருரூபாய் வீதம் பிச்சைகாசு போட்டுட்டு வந்தாச்சு (சாரிங்க எருமை சார்.... இந்த ஜடங்களுக்கு உங்க பேரை வச்சதுக்கு)

அப்பறம் மண்ணெண்ணெய் ஊத்துற  இடம். அங்கேயும் அதே நீண்ண்ண்ண்ண்ண்ட க்யூ :-(
தெரிஞ்சவர்கிட்ட போன்ல மொக்கை போட்டுட்டே ஸ்லோவா வேல செஞ்சுட்டு இருந்ததுனால கூட்டம் கூடிடுச்சு. வீடு கட்டுறாராம்..... பேச்சுக்கள் சிமெண்ட்,செங்கல்,கம்பி விலையின் ஏற்றம், வைகை ஆத்து மணல் அள்ளுவதில் கெடுபிடி பற்றியிருந்ததால் நமக்கு தேவையில்லாத மேட்டர்ன்னு கண்டுக்காம விட முடியல (அதெல்லாம் வச்சு ஒரு பதிவு தேத்தலாம்னு தான்;-) இங்கே தான் அவரின் பிச்சைக்காரதனம் தெரிய வந்துச்சு. "எத்தன லிட்டர்மா"ன்னு கேட்டுட்டே இருக்கும் போது கீழே வைத்திருக்கும் ட்ரம்மில் 100 மில்லி மண்ணெணெய் விடப்பட்டது. (சொட்டுற மண்ணெண்ணெய் அதுல வடியுறதுக்காக விட்டு வைக்கிறாராம். ஆனா அதுக்கு சின்ன பாத்திரம் போதும்ல?!!!. அண்டா எதுக்குன்னு கேட்க யாருக்கும் தைரியம் இல்ல :-( அப்பறம் இன்னொரு கொடுமை பாய்ன்ட்  0 வில்  சரியாக முடிப்பதற்கு முன்பே ஊற்றுவது நிறுத்துனார்.

முதல் முறை நா கவனிக்கும் போது சாதாரணமாக தான் நெனச்சேன். மறுபடியும் அடுத்தடுத்த முறையும் தொடர்ந்துச்சு. யாரும் கவனிக்கலையா என்ன? ஏன் இந்த எழவுலாம் நம்ம கண்ணுக்கு மட்டும் படுது? :-( கேட்காமல் இருக்க முடியல. கேட்டுட்டா அடுத்த முறை பல அலைகழிப்புக்கு பிறகு தான் மண்ணெண்ணெய் கிடைக்கும். நாம போய்டுவோம். அப்பறம் அம்மா தானே கஷ்ட்டப்படணும். கேட்டுட்டாலும் பக்கத்தில் நிற்பவர்கள் சப்போர்ட் பண்ணாம "உனக்கென்ன வந்துச்சு"ன்னு சொல்லிட்டா அவமானமா இருக்குமே. அப்படியும் என்னை சப்போர்ட் பண்ணாம என்னையே கேள்வி கேட்டா "உனக்கு வேணும்னா கம்மியா வாங்கிக்கோ. எனக்கு கரேக்ட்டா 3 லிட்டர் வேணும்"னு சொல்லிடலாமா?. அப்படி சொல்லிட்டு வெளியே போனா உயிருக்கு உத்திரவாதம்?னு மனசுக்குள்ள 2 ஆமிக்கள் வக்கில் மாதிரி சண்ட போட்டுட்டு இருந்துச்சுங்க.
எனக்கு முன் ஒரே ஒரு நபர் தான். என்ன செய்ய? நம் முறை வந்தா நாலு வார்த்த நமக்கு தெரிஞ்ச ரூல்ஸ் பேசலாமா? இல்ல கம்முன்னு கொடுக்குறத வாங்கிட்டு போலாமா?ன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே  எனக்கு முன் இருந்த நபர் கேனை வைத்ததும் அண்ணே..............ன்னு அலறுனார். 2 ஆமிக்களும் பயந்து ஒளிஞ்ச்சு பயத்துல. என்ன நடக்குது? எதுக்கு இப்படி கத்துறான்? ஒரு வேள நம்ம மூஞ்ச பாத்துட்டானோ????? :-)

"மெஷினை refresh பண்ணி சரியா போடுங்கண்ணே... நீங்க போன்ல பேசிட்டே கவனிக்காம கீழே விட்டுட்டீங்க போல.அதான் சரியா 0 பாய்ண்ட்'அ மெஷின் காட்டாம 0.1ல காட்டுதுண்ணே"ன்னு பவ்யமாக பேசிய பிறகு "ஓ....கவனிக்கலடா தம்பி.....இதோ ஊத்துறேன்"ன்னு தன் குட்டு வெளிபட்டதை மறைக்க வழிஞ்சிட்டே   0 பாய்ன்ட்ல ஆரம்பிச்சு சரியா 3.0 பாய்ன்ட்லையே முடிச்சார்.

சிரிச்ச முகத்துடன் "இப்ப ஓக்கே.....நன்றிங்கண்ணே... அடுத்து வரவங்களுக்கும் அப்படியே ஊத்துங்கண்ணே... பாவம்!!! எத்தன தடவ தான் நீங்களும் கவனிக்காமலே இருக்க போறீங்க? நீங்க வீடு இல்ல... பங்க்ளாவே கட்டலாம்ணே"னு சொன்னதும்  விநியோகிப்பாளரின் சிரித்த முகம் சிவந்து சினத்தோட பார்த்தார் (அப்பவும் அவமானமா இல்ல அவருக்கு) நான் கூட இப்படிலாம் கேட்டுருக்க மாட்டேன்...... என்னா சாமர்த்தியம்? என்னா சாமர்த்தியம்? கண்டிப்பா அந்த நபர் சொன்ன வார்த்தை செருப்பால் அடித்தது போல் இருந்துருக்கும் அவருக்கு.

இவன் அப்பன் வீட்டு சொத்துல பாதிய தா அப்படின்னா கேட்டார் அந்த நபர்? கொடுத்த காசுக்கு 3 லிட்டர் குறையாம கொடுக்க இவனுங்களுக்கெல்லாம் வலிக்குதாம். என்ன கொடுமை டா இது???? என்ன பொழப்புடா இது???? ஒரு ஆள்கிட்ட 200 மில்லி கொள்ளையடிச்சா 3000 ரேஷன்கார்ட்க்கு என்ன ஆச்சு? ஒரு லிட்டர்க்கு மானியம் போக அரசு 12 ரூபாய்க்கு விற்றாலும் கூட இவர்கள் அதனை வெளியே கள்ளச்சந்தையில் 40 ரூபாய்க்கு விற்பதாக விஷாரிக்கும் போது தெரிஞ்சுகிட்டேன். உண்மை தான்.... மொதல்ல இவனுங்க சுவிஸ்ல எத்தன கோடி போட்டு வச்சுருக்காங்கன்னு விஷாரிக்க சொல்லோணும் ஹி..ஹி..ஹி....

தொழில் தர்மம்
  • 2மாசம் தொடர்ந்து அரிசி மண்ணெண்ணெய் வாங்கலன்னாலே தாலுகா ஆபிஸ்,நகராட்சின்னு அலைய விடுவாங்க.
  • ஒரு நபர் ஒரு ரேஷன் கார்ட் தான் கொடுக்கணும்(பக்கத்து வீட்டுக்கு உதவிக்கு கொண்டு வந்தாலும் ஒத்துக்கப்படா)
  • ஒவ்வொரு வார்டுக்கும் ஒதுக்கப்பட்ட நாட்களில் தான் பொருட்கள் வழங்கப்படும். நெடு தூரத்திலிருந்தோ அல்லது படிப்பறிவு இல்லாத வயதானவர்களோ வந்தாலும் கூட பச்சாதாபம் இருக்காது.
  • அவங்க கொடுக்குற சோப்பு,சீப்பு,கண்ணாடி வகைறாக்களுக்கு தகுந்தபடி காசு கொடுக்கணும்.இல்லைன்னா ரேஷன் கார்ட் கொடுக்காம "போய் எங்கேயாவது வாங்கிட்டு வாங்கன்னு"பிச்சைகார ஆசாமிகள் நம்மள பிச்ச கேட்க சொல்லுவானுங்க.
  • அங்குள்ள புகார் பெட்டியில் யாரும் முன் வந்து புகார் கடிதம் அளிப்பதில்லை. போட்டாலும் திருடன் கைல சாவி இருக்கும் போது அவனே மேலதிகாரிட்ட கொடுப்பானா?
  • முதல் மாதம் பொருட்கள் வாங்க வராத ரேஷன் கார்ட்களையெல்லாம் கணக்கு பண்ணி வாங்கிவிட்டதாக ரிஜிஸ்ட்டர் பண்ணிடுவாங்க.
  • மத்த திருட்டு தனங்கள் நான் சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை. அதான் டெய்லி பாக்குறோமே....
  • மண்ணெண்ணெய் ஊற்றும் இடமும் அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் இடமும் தனிதனியே தான் இருக்கும். அப்படியெனில் மண்ணெண்ணெய் கடையில் பொட்டி பொட்டியாய் மளிகை சாமான்கள் வச்சு தைரியமா கட்டாய விற்பனை செய்றது ஆச்சர்யம் தான். தலைமை அதிகாரிகளும் கண்காணிப்பு அதிகாரிகளும் ஒத்து போவதால் தானே இத்தன காலமும் தொடர்ந்து இந்த செயல்களை செய்றாங்க.......
 அம்மாவிடம் சொன்ன போது "இதுவே பரவால்ல. இப்பவாவது மெஷின் வந்துருக்கு. அப்பலாம் ஒரு டப்பாவுல அளந்து ஊத்துவாங்க. அதில உள்ள துளை வழியா பாதி போய்டும். இல்லைன்னா டப்பாவ நெழிச்சு வச்சுருப்பாங்க. அதுனால தான் அதுக்கு இது தேவலன்னு யாரும் தட்டி கேட்குறது இல்ல. கேட்டாலும் அடுத்த தடவ எதாவது காரணம் சொல்லி நம்ம ரேஷன் கார்ட் போலின்னு வாங்கி வச்சுடுவாங்க"ன்னு சொன்னாங்க. (கஷ்ட்ட காலம் :-(

நிலத்த அபகரிச்ச தனி மனிதனை தேடி தேடி கைது பண்ற அரசு, ஒட்டுமொத்த ஊர்மக்களையே ஏமாற்றும் இத்தகைய கருப்பு ஆடுகளை விட்டு வைப்பது ரொம்பவே வருத்தமா இருக்கு.
வசூல் ராஜாக்களா..............!!!!!!!!!! இனியாவது திருந்துங்கப்பூ..........

,

பள்ளிகூடம் போற வயசுல எனக்கொரு எதிரி.....  ( மனப்பாடம்,ஹோம்வொர்க், பரீட்சைன்னு செய்ய சொல்றவங்க யாராக இருந்தாலும் எமக்கு எதிரி தான். ஆனாலும் ஸ்கூல் போக ஆரம்பிச்ச வயசுல எனக்கு தெரிஞ்ச  என் முதல் எதிரி இவர். 45 வயசு இருக்கும் அவருக்கு)


 என் நடிப்ப எல்லாரும் நம்புறதுக்காக விதியேன்னு சிவாஜி படம்லாம் பாத்து.......பக்காவா ப்ளான் பண்ணி வெங்காயத்த நறுக்கி கண்ணுல வச்சு கண்ணீர வரவழச்சு.....  உச்சி வெயில்ல கூட காஷ்மீர் ப்ளாங்கெட்க்குள்ள ஒழிஞ்சு  வைப்ரேஷன் கொடுத்து, மொனங்குற சத்தம் வர வைக்க அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நான் தான் டான்னு சத்தம் வராம பாட்டு படிச்சு......... ஐய்யோய்யோயோ......................... ஒரு காய்ச்சல் வந்த மாதிரி நடிக்கிறதுக்கு என்னமா ப்ராக்டிஸ் பண்ண வேண்டியிருக்கு. அம்மா,ஆடு,இலை,ஈட்டி,உரல்ன்னு ஓரல் எக்ஸாம அட்டன் பண்ணாம இருக்குறதுக்கு என்னமா பாடு படவேண்டியிருந்துச்சு........  ஆனாலும் எதிரின்னு சொன்னேனே..... அவர் வந்து எல்லா ப்ளானையும் மொக்கையாக்கிட்டு போவார். 


“ஏலா..... எங்கிட்டேயே  நடிக்கியாலா? மருவாதையா இப்ப

, , , ,

ஆந்திரால ரொம்ம்ம்ம்ம்ப பேர்போனது காரம்னு எல்லாருக்கும் அடியேன் சொல்லி தெரியவேண்டிய அவசியமிருக்காது. (அதான் சொல்லிட்டீயே:) பப்புச்சாறு எனப்படும் பருப்பு ரசம் ரொம்பவே பிரபலம் (மொழிபெயர்த்துட்டாகளாம்). எனக்கு அதிகமா பாராட்டு வாங்கி கொடுத்த சமையல் குறிப்பு இது(இதுக்கு முன்னாடி???). நீங்களும் செய்து பாருங்க. சுவைக்கு குட்டிசுவர்க்கம் பொறுப்பு. (எக்குதப்பா செஞ்சு சொர்க்கத்துக்கு போனா  என்னைய கேட்கப்படாது:)

நமக்கெல்லாம் ரிக்ஸ் எடுப்பது ரஸ்க் சாப்பிடுற மாதிரின்னு நெனைக்கிறவங்க
                                                இங்கே க்ளிக்கலாம்


, , ,


கடைவீதிக்கு  துணி எடுக்க போகலாம்னு கிளம்பி பாதி வழியில் போன போது தான்  எந்த கடைன்னு குழப்பம்ஸ்.... சரி பழக்கப்பட்ட மக்கள்கிட்டையே விஷாரிக்கலாம்னு  (பெரியம்மா மகன்)அண்ணாக்கு போன் போட்டா  “இந்த ஏரியாவுலேயே அதான் பெஸ்ட் கட. அத விட்டா எங்கேயும் சீப் அண்ட் பெஸ்ட்டா இருக்கவே முடியாது. எக்கசக்க வெரைட்டி. அங்கே போ”ன்னு ஓசிக்கி  ஏகத்துக்கும் விளம்பரம்.... கொடுத்த காசுக்கு தான் வேல பாப்பாங்க. இவன் காசு வாங்காமலேயே நல்லா வேல செய்றான்னு பொழம்பிட்டே கடைய கண்டுபிடிச்சு போயாச்சு....
வாசல்லையே மகாராணிய வரவேற்குற மாதிரி வாங்கோ...வாங்கோனு (அப்படியே கொஞ்ச நேரம் ஜோதா அக்பர் படம் பார்த்த எபெக்ட் தான்.... ) சரிக்கி விடுற மாதிரி உபசரிப்பு.... பொதுவா இது எல்லா கடைகளும் உபயோகிக்கும் யுக்தி தான். ஆனாலும் குளுகுளுன்னு இருந்துச்சு ;)

உள்ளே நுழைஞ்சதும் 60 அல்லது 65 வயசு மதிக்கத்தக்க பெரியவர் என்னைய பார்த்ததும் எந்துருச்சு பக்கத்துல வந்தாரு. நமக்கு தான் ஊர் பூரா சொந்தக்காரங்க இருக்குற அளவுக்கு எதிரிகளும்(ஸ்கூல்ல டுக்கா

,

 "பேப்பர்லலாம் வெளம்பரம் கொடுத்து பாத்துட்டேன். ஆள் கிடைக்கல ஆமி.  உனக்கு தெரிஞ்சவங்க இருந்தா சொல்லி வை. எவ்வளவு கேட்டாலும் கொடுத்துடலாம்” -அண்ணாவின் மனைவி.
 
ட்வின்ஸ் வச்சுட்டு ரொம்ப சிரமமா இருக்கு. இன்னும் ஒரு மாசத்துல வேலைல ஜாய்ன் பண்ணனும். நல்ல ஆளா பாத்து அனுப்பேன்! ” -பெங்ளூரில் இருந்து சித்தி பொண்ணின் கெஞ்சல்.

வீட்ல வேல இல்லாம வெட்டியா தானே(இதுவே எவ்வளவு பெர்ர்ர்ர்ர்ர்ர்ரிய வேலன்னு அனுபவிக்கிறவங்களுக்கு தான் தெரியும்) இருக்கோம்.  நமக்கு தான் ஆள் கிடைக்கமாட்டாங்க(நம்ம ராசி அப்படி)கஷ்ட்டப்படுற(?!)மக்களுக்கு பொதுசேவை (?)பண்ணலாம்னு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வச்சு 4 மாசம் ஆச்சு. ஒரு ஆள் கூட சேதி சொல்லி விடல. அட கடுதாசி கூட போட்டுவிடலன்னா பாத்துக்கோங்களேன்.....வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கிறது குதிர கொம்பாய்டுச்சு :( சரி நம்மளே களத்துல குதிச்சுடலாம்னு(மொட்ட மாடில இருந்து இல்ல)  அம்மா சொன்ன  பொன்னம்மா வீட்டுக்கு போனேன்.

, , , ,

கரை தாண்டிய உலகம்
காண துடித்ததால் -இன்று
மீனைபோலவே
உடலை விட்டு உயிர் தாண்டிட துடிக்கிறது.

உறக்கம் விற்று
உன்னுடன் கழித்த இரவுகள்
அன்று இனித்ததால்

இன்று வரையில்
விருப்பப்பட்டு பல மாத்திரைகளை உண்டும்

,

ஆவலா எதிர்பார்த்திட்டு இருந்த நோன்பு வந்துருச்சு.....



நோன்புன்னு சொன்னாலே சட்டுன்னு நெனப்புக்கு வரது நோன்பு கஞ்சி தான்.  வருஷத்துக்கு ஒரு முறை தான் கிடைக்கும் என்பதாலோ என்னவோ ஒரு மாசம் முழுக்க தினமும் குடிச்சாலும் சளிக்காது.


எங்க ஊர்ல  நோன்பு கஞ்சி வாங்க போகணும்னு சொன்னாலே மொதல்ல பெரிய க்யூ தான் ஞாபகத்துக்கு வரும். ஆனாலும் அசர மாட்டோம்ல? எப்படியும் வாங்கியே தீரணும். காரணம்  என்னன்னே  விவரிக்க முடியாத சுவை, மணம், அதையும் மீறி அதிலுள்ள சத்துக்கள் தான்.  சாயங்காலம் ஒரு கப் குடிச்சாலே போதும் எனர்ஜி வந்த பீல் கிடைக்கும்!!!


ஒவ்வொரு ஊர்லையும் செய்யும் நோன்பு கஞ்சிகளின் செய்முறையும் சுவையும் வேறுபடலாம்.  சென்னையில்  இருந்த போதும் லக்னோல இருக்கும் போதும் நான் ரொம்பவே மிஸ் பண்ண விஷயத்துல எங்க ஊர் நோன்பு கஞ்சியும் அடக்கம்.  இத  சும்மாலாம் ஒன்னும் சொல்லல...   அடிச்சு

, , ,