கடலலைகள் நம் பெயரை அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும்-இனி
எங்கனம் உன்னை மறக்கும்

கைகோர்த்து சென்ற இடமெல்லாம்
உன்னை கேட்டு நச்சரிக்கும்-இனி
கண்ணீர் மட்டுமே பதில்களை உச்சரிக்கும்

,

Museum :- அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மியூசியம்..அப்படினா..எதோ Music Theater னு நினைச்சேன். இளையராஜா,தேவா இவங்கள்லாம் அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பாங்க போல அப்படினு நினைச்சேன்.அப்பறமாதான்........ பழமைகளும் பண்பாடுகளும் சங்கமித்து, காலத்தின் முன்னோக்கிய ஓட்டத்திலிருந்து, விலகி கொஞ்சம் பின்னோக்கிய பார்வையும், ஓர்மையும் ஏற்படுத்தி, பழங்காலங்களை பத்திரப்படுத்தி தருவதுதான் அருங்காட்சியகம். காலத்தின் நீளங்களையும் கலாச்சார ஆழங்களையும் தன்னகத்தே கொண்டு முன்னோர்களையும் முன்னோர்கள் சார்ந்தவற்றையும்  நினைவு கூர்ந்திட பொதுவான ஒரு நினைவிடம்.

, , ,

 பரமக்குடில ரோட்டுல போகும் போது  விரல் விட்டு எண்ணிட்டே வந்தா எப்படியும் கண்டிப்பா புரோட்டா கடை எண்ணிக்கை 150க்கும் மேல் தாண்டும். சாயங்காலம் ஆகிட்டா போதும் ஊரே சால்னா வாசன தான். எத்தன முறை சாப்பிட்டாலும் சளிக்காது. காரணம்  கமகம சால்னா . எத்தனையோ

, , ,

இன்னைக்கு சொல்ல வந்த விஷயங்கள் என்னன்னா.......... கீழ பாருங்க ;)


தோழி பிரஷா அவங்க ப்ளாக்கின் முதல் பிறந்த நாளைக்கு எனக்கு கொடுத்தது (பொதுவா பிறந்த நாள்னா நம்ம தான் கொடுக்கணும். இது புதுமாதிரியா இருக்குல?  இதையே எல்லாரும் கடைபிடிங்கப்பா..... பர்த்டேக்கு போனோமா, கேக் சாப்பிட்டோமான்னு வர மாதிரி இருக்கணும்.
என்னது என் பொறந்த நாளா? ஹூம்...ஹூம்.... எனக்கே தெரியாது. ;)

, , , ,

கடுங்குளிர் மாலை பொழுதில்
எதிரில் ஆள் வந்தா கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் பரவ
அதையும் பொருட்படுத்தாமல் கடமையே கண்ணாக முயற்சியே மூச்சாக கொண்ட இளம்(?!) கிரிக்கெட் புயல், நாளைய சச்சின், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் இல்லல்ல...... சூரியன்  தன்விர் ஷாம் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தின் போது எடுக்கப்பட்ட சுவாரசியமான படங்கள் சில......
கிரிக்கெட் சூப்பர்  ஸ்டாருடன் ஓர் நாள்....

  இன்னைக்கு ஹீரோ நம்ம தான்..!!!!


, ,

நன்றி-கூகுள்
சைக்கிளையும் ரிக்‌ஷாவுலையும் 10 நிமிஷத்துக்கு ஒருமுறை போய்ட்டு தான் இருந்தாங்க. 10 நாளைக்கு முன்னாடி பதிவு பண்ணியும் சிலிண்டர் வரலையேன்னு கேட்டா பாக்கெட்லையா வச்சுருக்கேன்? வரும் போது வரும்னு திட்டாத குறையா சொல்லிட்டு போறாங்க.

நம்மளே ஏதோ கையில என்ன மசாலா பாட்டில் வருதோ அதுல உள்ளத எண்ணெயில கொட்டி சமைக்கிற கேஸ். கேஸ் இல்லாட்டி 10 நாள் சமைக்கலன்னா கஷ்ட்டப்பட்டு கத்துகிட்ட சமையலும் மறந்துடுமோன்னு மனசுக்குள்ள பயம்.  (கெட்டதுலையும் நல்லதுனா இது தான். கேஸ் வராத நாட்களில் எல்லாம் ஹோட்டல் சாப்பாடு;).

இன்னைக்கு விடவே கூடாதுன்னு வாசல்ல சேர் போட்டு மொபைல்ல

, , ,

காலைக் கதிரவனோடு கண்விழித்து
கை எட்டும் தூரத்தில் இருக்கும் காஃபியை
கண்டு விட்டு அருந்தாமல்
மீண்டும் ஒரு குட்டி தூக்கம்
பின்பு
கலையாத தூக்கம் களைந்து
களைந்த கூந்தலை அள்ளி சொருகி
ஆறிக்கொண்டு இருக்கும் தேனீரை பருகி
வேலைக்கு செல்பவர்களே கூட
மேற்கொள்ளாத அவசரத்துடன்
வேக வேகமாய் தயாராகி 
வீட்டின் பால்கனியில் தொங்க விடப்பட்ட ஊஞ்சலில் ஓடி போய்
அமர்ந்து கொண்டு அதில் ஆடிக்கொண்டே (செய்திதாளை படிக்கலேனா கூட) படிப்பது போல் ஸ்டைலா ஒரு போஸ் கொடுத்து (அதுவும் இங்கிலீஸு பேப்பர்னா இன்னும் கெத்தா இருக்கும்) அப்பறம் தேவையே இல்லேனாலும் கூட "யாரங்கே! சூடா ஒரு காஃபி கொண்டு வா"னு அதிகாரமாய் சப்தமிட்டு கேட்க ஒரு ஆசை.


 அதனையடுத்து லஞ்சுக்கு என்ன பன்னலாம் sorry  என்ன சாப்பிடலாம்னு தீர்மானிக்க மெனுவை கொண்டுவானு வேலைக்காரியிடம் ஒரு அதட்டல் தொனியில் சொல்லி அவள் மெனுவை மனு கொடுப்பதுபோல் பவ்யமா கொடுக்க அதை பார்ப்பது போல் கொஞ்சம் நேரத்தை வீணடித்து கடைசியில் அதில் இல்லாத
ஒன்றை Choose செய்து விட்டு ஒரு ஜூஸ் வாங்கி அதில் பாதி மட்டும் சும்மா பந்தாவுக்காக குடித்துவிட்டு ஜம்முனு வெளியே கிளம்பி அப்படியே நம்ம டார்கெட் படி மார்க்கெட் பக்கமா போய் ஒரு கேரட்டை எடுத்து ஸ்டைலா மென்றுகொண்டே (ஏன்னா நமக்கு இந்த  தம் அடிக்கிற பழக்கம் இல்லை பாருங்க அதான்) விலை பேசாமல் பேரம் பேசி கடைசில அந்த கடையிலிருந்து நடையை கட்டி கடைசியில் இருக்கும் கடையில் ஐம்பது பைசாவுக்கும் ஒத்த ரூபாய்க்கும் High Decibel ல கத்தி கத்தி கத்திரிக்காய் உட்பட கருவேப்பிலை வரை அள்ளி போட்டுக்கொண்டு வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பே ஆப்பிள் ஜூஸ் கொண்டுவா!! என்று மிரட்டி வாங்கிய ஜூஸை மிச்சம் வைக்காமல் குடித்துவிட்டு, வெயிலின் Hot ஐ விரட்டிய பின் hotmail ஓபன் செய்து (அங்கே inbox 0 தான் காட்டும், நாம் அதை வெளிக்காட்டாமல்) பழையமெயிலையே ஒரு தடவை படித்துவிட்டு. அப்பறம் என்ன செய்யலாம்னு யோசிச்சே மாலைவரை பொழுதை கழித்து, அதன் பின்பு எந்த வேலையும் இல்லாமலே தம்மாத்துண்டு Iriver Music Player ஐ செவியில் அணிந்துகொண்டு AR Rahman இசையுடன் அவசர அவசரமா வெளியே கிளம்பி
சாலையோர மரங்களுடன் சஞ்சரித்துக்கொண்டு இருக்கும் காற்றிடமும், விவாசயிகளின் உழைப்பை உரைக்கும் சேற்றிடமும் இயற்கையின் எழிலை அனுபவித்தவண்ணம் இசையை ரசித்தவண்ணம் நெடுஞ்சாலையில் ஒரு பாதயாத்திரை. முடியும்வரை நடந்து விட்டு வீடு திரும்பி இந்த களைப்புக்கு இதமாக ஒரு கப் சூப், அப்பறம் ஒரு சுகாதார நோக்குடன் ஒரு குளியல். இதனையடுத்து மீண்டும் ஹாட்மெயில் அதையடுத்து துயில்.

 How is this Life,  It's Wonderful na? இவ்வாறான ஒரு வாழ்க்கையை அடிக்கடி அசைப்போட்டதுண்டு..இப்படி ஒரு வாழ்க்கையை வாழ தேவை ஆறறிவு கொண்ட ஒரு மெஷின் அதுதான் வேலைக்காரி என்ற அறியப்பட்ட Maid Servant, இதெல்லாம் படிக்கும்போது கொஞ்சம் திமிரா இருக்குல்ல :))) ஓகே  Aaprt from the அலட்டல்..

இந்த வேலைக்காரி வேலைக்காரினு சொல்றோமே இங்கேதான் Knotty Problem starts.. ஒரு நான்கு வருடங்களாகவே எங்க ஊர்ல வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதான ஒன்றாகியது.

500 ரூபாய் கூலியில் பாத்திரம், துணி, வீடு முதலியனவற்றை கழுவி, சமையலும் செய்து முடிக்கவேண்டும். இந்த சம்பளத்துக்கு சம்மததுத்துடன் ஒரு வேலைக்காரி. வேலைக்காரி வைத்து வேலைகள் மேற்கொள்ள எனக்கும் ஒரு ஆசை (I am not sure Whether I am eligible for it).

நாங்க குடியிருக்கும் பக்கத்து வீட்டில் குடி கார குடும்பதலைவனுடன் ஒரு குடும்பம் குடியேறி குடித்தனம் ஆரம்பித்தது. வீட்டு வேலை செய்துதான் இவர்கள் வீட்டில் நிர்வாகம் நடக்கிறது என்பதை அறியமுடிந்தது. சிறிது நாட்களுக்கு பின் அந்த குடும்பம் எங்களுக்கு பழக்கமாகியது.அதில் ஒரு பெண் ரொம்ப நாளாக வேலைக்குச்செல்லாத காரணத்தால் ஆத்தா கண்டுபுடுச்சுட்டேன் என்ற ரேஞ்சில் வேலைகாரி கிடைத்ததாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு நாள் அந்த வீட்டு பெண் என்னிடம் வந்து “அக்கா இந்த போன் வச்சுகிட்டு 1000 ரூயாய் தரீங்களா??"னு கேட்டாள், இதன்மூலம் தெரிந்து கொண்டேன் அவள் வேலை இழந்த காரணத்தை..இந்த சம்பவத்தால் எனக்கு வேலைக்கு ஆள் வைக்கும் ஆர்வம் போயிருச்சு.

அப்பறம் சென்னையில்....
இங்கே வேலைக்கு ஆள் ஏராளாமாகவே திரிந்தார்கள். ஒவ்வொரு வேலைக்கும் தனி தனியா விலை வைத்தார்கள்......
சமையலுக்கு 500 ரூபாய்
துணி துவைக்க 750 ரூபாய்
பாத்திரம் கழுவ 450 ரூபாய்
வீட்டை சுத்தம் செய்ய 300 ரூபாய்

இப்படி ஒரு Professional லாவே quotation கொடுத்தார்கள்.
anyways its ok. done! நான் இந்த 2000 ரூபாயும் தரேன் வீட்டோட வேலைக்காரியா வீட்டோட இருக்க சம்மதமானு கேட்டேன். என்னை 2000 க்காக நீங்கள் சிறை கொண்டால் என் குடும்பம் ரன் ஆகாதும்மோய்னு மறுப்பு சொல்லி நகர்ந்தாள்..அந்த தெருவில் 20 வீடுகளும் இவளது கவனிப்பில்தான். எனவேதான் இந்த கிராக்கி. எனிவே அவளுக்கு ஓகே சொல்லி வேலைக்கு அமர்த்தினேன்.

ஒருதடவை வேலைக்காரி வேலையை காட்டினாள். எங்க வீட்டில் கெஸ்ட் வந்திருந்த நாட்களில் அழுக்கு துணி அதிகமானதால் அதற்கு Extra Charge செய்தாள்..துணி அதிகமா இருக்கு அதுனால 200 ரூபாய் போட்டுக்கொடுனு வேட்டு வைத்தாள்..அவளோட இந்த ட்ரிக்கை பார்த்து எரிச்சல் வந்து வாசல்வரை சென்று பெரிய கும்புடு போட்டு வழியனுப்பிவிட்டு கதவை அடைத்தேன்.

ஒருநாள் அக்கா வீட்டுக்கு போனேன்.. நான் போன அக்கணமே அக்கா பதறியடுத்து என்னை தனியா அழைத்து சென்றாள். எதுக்குனு நான் கேட்பதற்கு முன்னாடியே அவளே சொன்னள்..அட உளறுவாய் ஆமினா அங்கே நின்னு நாம பேசுனா, நம்ம கதையை ஊர் பேசும். அதை வேலைக்காரி அப்படியே கேட்டு அடுத்த வீட்டில் போய் ஒலிபரப்பிவிடுவா. கூலி வாங்காமல் வேலைக்காரிகள் செய்ற ஒரே வேலை இந்த வேலைதான். ஒரு வேளை நீ அங்கே உளறியிருந்தா அடுத்த கணமே ஒலிபரப்புதான். நல்ல வேளை நான் உன்னைய இங்கே இழுத்துட்டு வந்துட்டேன். அந்த அக்கபோருக்கு பயந்துதான் அக்கா உன்னைய இங்கே இழுத்துட்டு வந்தேனு சொன்னா. அப்பதான் எனக்குமே ஞாபகம் வந்துச்சு எங்கிட்டேயுமே ஒருதடவை இன்னொரு குடும்ப விஷயங்களை ஒப்பித்துக்கொண்டு இருந்தாள். நல்ல வேளை நான் தப்பித்துக்கொண்டேன் இப்ப.

டேபிள்ல இருந்து பணத்தை எடுத்து கேபிள்காரர்கிட்ட கொடுக்கும்போது வீட்டோ இருந்து வேலை செய்ய ஆள் யாரும் கிடைப்பாங்களானு ஒரு விசாரிப்பு கொடுத்தேன். மறு நாள் வந்தது ஒரு ஆள் வந்தது. முதல் நாள் சொல்லிவிட்டதன் பலன்.

பேச்சுவார்த்தை தொடங்கியவுடனே மாசம் 4000ரூபாய்னு ஒரே போடு போட்டார். எதுக்குமே அசராதா எங்க ஆள் இதுக்கு ஆடி போய்ட்டார். ம்ஹும்..  Basicகே சரியில்லையே so நீயே பேசிக்கோ னு அவரு இடத்தை காலி பண்ணிட்டார்.

அப்பறம் வேலைக்கு வந்த ஆள் போட்ட நிபந்தனைகள் பாருங்க...
  • 1தேதி ஆனதும் கைக்கு பணம் வர மாதிரி பாத்துக்கோங்க
  • அப்பப்ப லீவ் எடுத்துக்குவேன். ஆனா சம்பளத்துல கழிக்க கூடாது.
  • நாயத்து கிழமை(ஞாயிறு) லீவ் வேணும்.
  • காலைல 10 மணிக்கு வருவேன் மதியம் கிளம்பி மாலை 5 மணிக்கு வருவேன். அடுத்து நைட் 8 மணிக்குள்ள வீட்டுக்கு போகணும்.
  • மதிய, இரவு சாப்பாட்டை வீட்டுக்கே கொண்டு போய்டுவேன்.
  • நோன்புக்கும்,ரம்ஜானுக்கும்,ஹஜ்ஜு பெருநாளைக்கும் துணி எடுத்து கொடுக்கணும்.காசா குடுத்துட்டாலும் நல்லது தான்.
  • என்னால தண்ணி குடத்த 5க்கு மேல தூக்க முடியாது. (வாரம் ஒரு முறைக்கு)
  • கட தெருக்குலாம் போக சொல்லாதீங்க எனக்கு பிரஷர் இருக்கு.
  • ஆள் அதிகமா வந்தா அப்போதை மட்டும் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துடுங்க.
இப்ப அந்தம்மா தான் வேலைக்கு வந்துருக்காங்களா இல்ல நாமதான் வேலைக்கு போயிருக்குமோனு குழப்பமே வந்துருச்சு போங்க!!!!!!!!

இன்னும் என்னன்னமோ சொன்னார். ஆரம்பிக்கும் போதே தலை சுத்தியதால் ஞாபகம் இல்ல. இப்போதைக்கு 3000 தரேன்.. போக போக பாத்துக்கலாம் என்றதும் பேரம் பேச ஆரம்பிட்டுட்டாங்க. என்னவர்கிட்ட கெஞ்சி கூத்தாடி அவர பேசச்சொல்ல உடனே தலையாட்டிட்டு போனாங்க.

அடுத்த நாள் வந்தார். வருவதற்கு முன்பே பாத்திரம் கழுவி விட்டதால் வேலை இல்லை. வாஷிங் மெஷினில் துணியை  போட்டுவிட்டு அலச மட்டும் கொடுத்தேன்.அலசி என் கையில் கொடுத்தார். தந்ததை வெயிலில் உலர்த்திவிட்டு கொஞ்சம் ஓய்வெடுத்தேன். தூசு தட்டி வீட்டையும் தோட்டத்தையும் பெருக்கினார்.  எல்லா காய்கறிகளும் நான் நறுக்கி கொடுக்க சமைத்து முடித்தார். அக்ரிமென்ட் படி 1 மணிக்கு போய்ட்டு சாயங்காலம் 5 மணிக்கு வந்துச்சு மகராசி. அப்பறம்  டீ போட்டு குடுச்சுட்டு எனக்கும் தந்துட்டு வேக வேகமா சமையலை முடிச்சு உடனே கூடையை தூக்கிட்டு கிளம்பிட்டார்.

 இதுக்காகவா நாம்ம பணம் குடுக்கணும்னு ஓவரா யோசிச்சு முடியே கொட்டி போச்சு. அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் வேலைக்காரிய வைக்க வேண்டிய எடத்துல வைக்கணும் பா. எந்த வேலையும் நீ பாக்காத என அட்வைஸ்.வீட்டோட வேலைக்காரின்னு சொல்லி இப்படி ஏமாந்து போயிருக்க?ன்னு என் அக்கா ஒரே திட்டு. இந்த வேலைக்கா 4000 என என்னவர் முறைக்க என் அம்மா மட்டும் அதே எடத்துல என்னை நெனச்சு பாத்தா உனக்கு அவங்க மேல பரிதாபம் தான் வரும். காசு போகுதுன்னு கவலப்படாத. மத்தவங்களுக்கு நன்மை செஞ்சா வேற வழியில கண்டிப்பா இறைவன் கொடுப்பான். நம்மனாலேயே நம்ம வீட்டு வேலைய பாக்க முடியாம தன் அவங்கள கூப்பிட்டுருக்கோம். நம்ம வீட்டு வேலைய செய்றதுக்கே நமக்கு எப்படி கஷ்ட்டமா இருக்கு? எல்லா வீட்டுலையும் பாக்குற அவங்களுக்கு எப்படி இருக்கும்? அவங்களுமே ஏதோ ஒரு கஷ்ட்டத்துக்காக தான் இந்த வேலைக்கு வந்துருப்பாங்க இல்லையா? அதெல்லாம் நெனச்சு பாரு.உன்னை நீயே குழப்பிக்க மாட்ட" ன்னு அர மணி நேரமா போனில் அட்வைஸ்.

இப்ப தெளிவாகிட்டேன். அம்மா சொல்றது தான் கரேக்ட். குடுக்குற பணத்த சம்பளம்னு நெனச்சா தான் கஷ்ட்டம். நன்மை செய்வதாக நெனச்சு கொடுக்கலாம். என்னவர் சொல்வதும் கரேக்ட். செய்ற வேலைக்கு தான் பணம். ஸோ நம்ம வேலை செய்ய கூடாது. அக்கா சொல்வதும் கரேக்ட். வீட்டோட வேலைக்காரியா இல்லைன்னாலும் நாம்ம சொன்ன நேரத்துக்கு தான் வரணும், நேரத்துக்கு தான் போகணும்.

அடுத்த நாள் அவரின் வருகைக்காக காத்திருந்தேன். வரவில்லை. அடுத்த நாளும் வரவில்லை. ஒரு வாரம் போனது. கேபிள் காரனிடம் என்ன ஆச்சுன்னு போன் போட்டு கேட்டா "வயசான அம்மான்னு கூட பாக்காம அந்த பொண்ணு என்னை பயங்கரமா வேல வாங்குது. சம்பளம் வேற கம்மியா கொடுத்தா எப்படி பொழப்ப நடத்துறது?ன்னு அந்தம்மா கேக்குறாங்கம்மா"ன்னு சொன்னதும் இடிஞ்சு போயி உக்கார்ந்தேன் :((
அடப்பாவிகளா என் மாமியார்கிட்ட கூட கெட்ட பேரு வாங்கினதே இல்ல. ஆனா வந்த ஒரே நாள்ல என்னைய கொடுமைக்காரின்னு சொல்லிட்டாங்களேன்னு அழுக்காச்சி தான் போங்க.

அதாவது,... Dedicated டா வேலை செய்றவங்ககிட்ட சம்பளம் கொடுக்கும்போது அது செலவா தெரியாது..in fact கொடுக்கும் போது நமக்குமே ஒரு மகிழ்ச்சி இருக்கும்.அவங்களோட பிரச்சனைகளையுமே நமக்கு Care பண்ண தோனும் இல்லையா? ஒரு Genuine Person க்கு உதவி செஞ்சா நமக்குமே நன்மைதானே இல்லையா??? சும்மா எதோ ஒரு Deal மாதிரி கராரா இருக்குறவங்களை பத்தி நாமளும் பெருசா அக்கரை எடுத்துக்க முடியாது.நாமளும் கராராதான் இருக்க தோனும்

எப்படியோங்க.....
பாவப்படலாம் பரிதாபப்படலாம்
ஏமாறக்கூடாது
உதவி செய்யலாம் ஒத்துழைக்கலாம்
உஷாரா இருக்கோணும்.
நீ வாழ பிறரை கெடுக்காதே

என்றும் அன்புடன்
ஆமினா

பாஸ்மதி ரவாபாயாசம்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி ரவை- 50 கிராம் 
பால் -1லி
சீனி- 200 கிராம்
நெய்- 3மேசை கரண்டி
முந்திரி- 20
கிஸ்மிஸ்-10
ஏலக்காய்-3  
கிராம்பு- 2

, , ,

ஆசியா அழைப்பை ஏற்று இதை தொடர்கிறேன். 2010 எவ்வளவு பொறுமையா வெரட்டி விட்டோமோ அதே படி பொறுமையா படிக்கணும் சரியா? எடுத்ததும் முதல் பத்தியும் கடைசி பத்தியும் படிச்சுட்டு ஓட கூடாது (எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை தான் :)

 ஜனவரி 
சென்னை என்பதால் முதல் நாள் இரவு எங்கள் தெருவில் நியூ இயர் பயங்கர கொண்டாட்டம். வாழ்க்கைல முதல் தடவ சூரியன் FM க்கு பேசினேன். முதல் முயற்சியிலேயே வெற்றி.. ஏன்னா போன் போட்டது அதுல வேல பாக்குற பொண்ணு ;)  என்னவர் வருஷா வருஷம் வாங்கி கொடுக்குற டைரி தான் என் நியூ இயர் ஸ்பெஷல்....

கத்திபாரா மேம்பாலத்துக்கு பக்கத்துலேயே ஹிந்துஸ்தான் காலேஜ்னு நெனைக்கிறேன் பேரு மறந்து போச்சு (உருப்படியா போனா தானே?! இருந்த 8 க்ளாஸ்ல 1 நாள் தான் போனேன்). அங்கே மெட்ராஸ் யுனிவர்சிட்டி பெர்சனல்

, ,