Museum :- அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மியூசியம்..அப்படினா..எதோ Music Theater னு நினைச்சேன். இளையராஜா,தேவா இவங்கள்லாம் அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பாங்க போல அப்படினு நினைச்சேன்.அப்பறமாதான்........ பழமைகளும் பண்பாடுகளும் சங்கமித்து, காலத்தின் முன்னோக்கிய ஓட்டத்திலிருந்து, விலகி கொஞ்சம் பின்னோக்கிய பார்வையும், ஓர்மையும் ஏற்படுத்தி, பழங்காலங்களை பத்திரப்படுத்தி தருவதுதான் அருங்காட்சியகம். காலத்தின் நீளங்களையும் கலாச்சார ஆழங்களையும் தன்னகத்தே கொண்டு முன்னோர்களையும் முன்னோர்கள் சார்ந்தவற்றையும்  நினைவு கூர்ந்திட பொதுவான ஒரு நினைவிடம்.  புதைந்து போனவற்றின் பிறப்பிடம். அவ்விடமே அருங்காட்சியகம். இவ்விடத்தில் அணிவகுத்து நிற்கின்றன மரணித்து போன மரபுகளும், மறந்து போன நாகரீகங்களும். இப்படியாக நம்மை நினைக்க தூண்டுவது அருங்காட்சியகம். இது ஒரு வரலாற்று ஜன்னல். (பாருடா.... பழமைய பத்தி பேச ஆரம்பிச்சதும் சென்னை செந்தமிழும் திருவிளையாடல ஏதோ பேசிக்கிற புரியாத மொழி மாதிரி ஆகிடுச்சு;)

இணையம்(Internet) அப்படினா..என்னனே தெரியாது..என்னனு பாப்போமேனு வந்தப்ப என்னனு தெரிஞ்சுகிட்டேன். என்னல்லாம் இருக்குன்னும் தெரிஞ்சுகிட்டு இருக்கேன். இணையம் ஒரு விர்ஷுவல் உலகம். கரன்ட் பில் கட்டுறதில இருந்து காதலிக்கிறது வரை எல்லாமே ஒவ்வொன்றாய் இந்த உலகத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. எல்லோராலும் போற்றபடுகிறது என்றால் மறுப்போர் உண்டோ மானிடமே? :) 

 இணைய உறவுகளில் உணர்வுகள் கூட புரிந்து கொள்ளமுடிகிறது. பாசங்கள் கூட பகிர்ந்து கொள்ளமுடிகிறது. தகவல் பரிமாற்றங்களுக்கென கண்டுபிடிக்கப்பட்டு அதையே செய்து வந்த இவ்விணைய உலகம் காலப்போக்கில் பல விஷயங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. மக்கள்களுக்கிடையே  உரையாடல்களுக்கும் ஒத்துழைத்தது. பொழுதுபோக்கான பல   திருவிளையாடல்களுக்கும் ஒத்துக்கொண்டது;)

இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள் :) ஆதிக்கமும் செய்யலாம்..அகப்பட்டும்போகலாம்( எதாவது புரியுதா?? :)) . புரியலேனாலும் பரவா இல்ல :-).

ஆக்கப்பணிகளும் செய்யலாம். விஷக்கிருமிகளிடம் அகப்பட்டு போகும் அபாயங்களும் நடக்கலாம்.இப்படியாக நம்மை நினைக்கத்தூண்டுவது இணையம் (Internet). இணையத்தின் சில நடவடிக்கைகள் ரெம்ப நாள் முன்னாடி குமுதம் வார இதழில் கூட ஒரு செய்தி படித்தேன். சென்னை கல்லூரி மாணவிகள்லாம் சேர்ந்து அதாவது என்னை மாதிரி ஒரு நாலு பேர் கொண்ட மகளிர் கூட்டம் :) ஒன்றாய் சேர்ந்து புறம் பேசாமல் ஒரு புறமாய் ஒதுங்கி புண்ணியமா ஒரு வேலை செய்தார்கள்..அது..ஆன்லைன் மூலமாக வாசனையை நுகரலாம் என்ற எதோ ஒரு வித்தையை சொன்னார்கள். அந்நாட்களில் எனக்கு இதைப்பற்றிய அடிப்படை ஞானம் கூட இல்லாததால் எனக்கு புரியவில்லை..உங்களில் கூட பல பேர் படித்திருப்பீர்கள் யாருக்கேனும் நினைவு இருப்பின் இங்கே சொல்லி செல்லுங்களேன்.

இணையத்தில் சில இடங்களில் Visualization with Animation ன்  அட்டகாசமான இயக்கங்களால் நிஜமான ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளன..அவ்வாறு ஒரு தளம் நேற்று கண்டேன்..அதை இன்று விட்டேன். கீழேயுள்ள லிங்கில் நுழைந்து செல்லுங்கள். அங்கே ஒரு அருங்காட்சியகம் உங்களை வரவேற்கும். சென்றவுடன் சிறிது நேரம் காத்திருப்பின் காட்சிகள் ஓட ஆரம்பிக்கும். பின்பு காட்சிகள் திரையில் விரிந்து உங்களை அரங்கினுள் அழைத்து செல்லும். திரையின் அடிப்பாகத்தில் உள்ள வலது, இடது, மேல் மற்றும் கீழ் பட்டன் மூலம் அதன் சுழலும் திசையை நிர்வகித்துக்கொள்ளலாம். காட்சிகள் ஓடிக்கொண்டு இருக்கும்போதே ஆங்காங்கே தெரியும் Direction Arrow வை கிளிக்குவதன் மூலம் குறிப்பிட்ட வளாகத்தின் உள்ளீடாய் சென்று பார்வையிடலாம். மேலும் திரையின் மேலே map என எழுதப்பட்டிருப்பதில் சொடுக்கினால் அரங்கின் மொத்த அமைப்பும் தெரியும்.அதன் மூலம் விரும்பிய இடங்களுக்கு தாவலாம். போகும் வழியில் உற்று நோக்கினால் ஆங்காங்கே ஸ்டில் கேமரா மாட்டி வைக்கப்பட்டிருக்கும். அதை கிளிக்கினால் அதனருகே கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள வரலாற்று குறிப்பு என்னவென்று படிக்கலாம்.ஒரு முறை சென்று பாருங்களேன்...... நேரடியாய் சென்றதைப்போல் ஒர் உணர்வு ஏற்படும்.

இணையத்திலேயே அருங்காட்சியகம்

கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் Stopபுகிறேன் :)
அன்புடன்
ஆமினா



, , ,

45 comments:

  1. சுத்திப்பாத்துட்டு வரேன் :-))

    ReplyDelete
  2. //இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள் :) ஆதிக்கமும் செய்யலாம்..அகப்பட்டும்போகலாம்( எதாவது புரியுதா?? :)) . புரியலேனாலும் பரவா இல்ல :-)//

    வசனங்களில் பின்னுறீங்க...ஆமா நீங்களும் அரசியலுக்கு....? :-)

    ReplyDelete
  3. தங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!

    ///பழமைகளும் பண்பாடுகளும் சங்கமித்து, காலத்தின் முன்னோக்கிய ஓட்டத்திலிருந்து, விலகி கொஞ்சம் பின்னோக்கிய பார்வையும், ஓர்மையும் ஏற்படுத்தி, பழங்காலங்களை பத்திரப்படுத்தி தருவதுதான் அருங்காட்சியகம். காலத்தின் நீளங்களையும் கலாச்சார ஆழங்களையும் தன்னகத்தே கொண்டு முன்னோர்களையும் முன்னோர்கள் சார்ந்தவற்றையும் நினைவு கூர்ந்திட பொதுவான ஒரு நினைவிடம். புதைந்து போனவற்றின் பிறப்பிடம். அவ்விடமே அருங்காட்சியகம்./// --வாவ்..! அற்புதம்..!

    சொந்த வரிகளாயின் இந்த வரிகளை என்ன சொல்லி எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை. மாஷாஅல்லாஹ்.

    'அருங்காட்சியகம்' என்றால்... அதற்கு மிக உன்னதமான விளக்கம். பள்ளி பாடப்புத்தகங்களில் கூட இவ்வரிகளை வைத்துவிடலாம்.

    அப்புறம்.., //இணையத்திலேயே அருங்காட்சியகம்// --சுட்டி திறக்க மாட்டேன் என்கிறதே..!

    //Stopபுகிறேன்//--திருஷ்டி பரிகாரம்?!?

    ReplyDelete
  4. நல்லாயிருக்கே.. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  5. ஸலாம் சகோ..

    நல்ல பகிர்வு..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  6. சுத்திப் பார்த்தேன்! ரொம்ப நல்லாயிருக்கு சகோ!

    ReplyDelete
  7. Nice..
    பகிர்வுக்கு நன்றி சகோதரி..
    See,
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

    ReplyDelete
  8. கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் Stopபுகிறேன் :)


    ..... stopபாதீங்க ..... continueங்க.....!

    ReplyDelete
  9. //இணையத்திலேயே அருங்காட்சியகம்//

    அட புதுமையா இருக்கே ரொம்ப நன்றிங்க இப்படி ஒரு தளத்தை பகிர்ந்துகொண்டதற்கு....

    ReplyDelete
  10. ஆமி யான்பெற்றபேரு அனைவரும் பெருக என்று என்ன உயர்ந்த எண்ணம்
    உங்களுக்கு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. //அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மியூசியம்..அப்படினா..எதோ Music Theater னு நினைச்சேன். இளையராஜா,தேவா இவங்கள்லாம் அங்கேயேதான் சுத்திகிட்டு இருப்பாங்க போல //

    ஹாஹாஹா.... என்னை மூணாம்கிளாஸ் ப‌டிக்கும்போதே எங்க‌ ஊரு காந்தி மியூசிய‌த்துக்குக் கூட்டிட்டுப்போய்டாங்க‌ எங்க‌ ஸ்கூல்ல‌ ஸோ நான் மியூசிய‌ம்னா ஏதோ அகிம்சை ச‌த்தியாகிர‌க‌ம் மாதிரி காந்திஜிக்கு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ வார்த்தைன்னு நினெச்சுட்டேன்!! ஜுராசிக் பார்க் பார்க்கும்போது மியூசிய‌த்துல‌ டைனோச‌ர் இருந்திச்சு... என்ன‌டா காந்திஜிக்கு ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ மேட்ட‌ரா இருக்கேன்னுதான் டிக்ஷ‌ன‌ரி பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்!! ஹிஹிஹி ("காந்தி" ப‌ட‌ம் டைர‌க்ட் ப‌ண்ண‌ ரிச்ச‌ர்டு அட்ட‌ன்ப‌ரோ அந்த‌ டைனோச‌ர் மியூசிய‌த்துல‌ இருப்பாரு ந‌ல்ல‌வேளை நான் அதை ஒரு லிங்கா எடுத்துப் புரிஞ்சிக்க‌ல‌!! ஹ‌ஹ‌ஹ‌)

    //கரன்ட் பில் கட்டுறதில இருந்து காதலிக்கிறது வரை//

    க‌ல‌க்கிட்டீங்க‌ :)



    // இணைய உறவுகளில் உணர்வுகள் கூட புரிந்து கொள்ளமுடிகிறது. பாசங்கள் கூட பகிர்ந்து கொள்ளமுடிகிறது//

    முற்றிலும் உண்மை.... முக‌ம் குர‌ல் போன்ற‌ புற‌ம் சார்ந்த‌ டிஸ்ட்ராக்ஷ‌ன்ஸ் இல்லாம‌ல் ர‌ச‌னை சிந்த‌னை என்று ம‌ன‌தும் ம‌ன‌தும் ம‌ட்டும் நேர‌டியாக‌ உறவாடிக்கொள்ளும் இணைய‌வெளிய‌ல்ல‌வா இது...! அழ‌கா சொல்ல்லியிருக்கீங்க‌ :)


    //இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள//

    ஏத்துக்கிறோம்ங்க‌!! :)

    அழ‌கான‌ ப‌திவு..... எழுத்துக்க‌ள் ஈர்த்த‌ன‌... ரொம்ப‌ வாழ்த்துக்க‌ள் :)

    ReplyDelete
  12. ஸாரி சகோ.... நான் என் பின்னூட்டத்தை நீளம் கருதி Stopப்ப வில்லை! :)))

    ReplyDelete
  13. சொல்ல வந்த விஷயத்தை வார்த்தை விளையாட்டுகளுடன் ரசனையாக சொல்கிறீர்கள். நல்ல பகிர்வு, புதிய தகவல்களுக்கு நன்றி..

    ReplyDelete
  14. இனி வரும் நாட்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதால், தவறான வகையில் பயன்படுத்தப்படாமல் சரி பார்த்துக்கொள்ளுவதும்
    மிக முக்கியமாக ஒன்று தான்..

    ReplyDelete
  15. நல்ல பதிவை எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  16. படிப்பதற்கு மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் சகோ...

    ReplyDelete
  17. >>> நான் ஒரு முறை மியூசியம் சென்றபோது என் அனுமதி இன்றி ஒரு பல்லை வைத்து இருந்தனர். கேட்டதற்கு சிங்கப்பல் என்றனர். திருட்டு பசங்க.

    ReplyDelete
  18. okee keeeee good job keep it up.

    ReplyDelete
  19. good post

    >>>
    கட்டுரையின் நீளம் கருதி இத்துடன் Stopபுகிறேன் :)

    sujaadhaa touch. m m

    ReplyDelete
  20. நல்லா ஒரு 6வது படிக்கிற பையன் கட்டூரை மாதிரி இருந்துச்சு.. இருந்தாலும் இந்த இன்ஃபோ ரொம்ப தேவையானது... பகிர்வுக்கு நன்றி.. அதான் தேங்க்ஸ்...

    ReplyDelete
  21. மூன்று நாளுக்கு ஒரு பதிவு எழுதினாலும் சும்மா நச்சுனு எழுதுறிங்க....

    ReplyDelete
  22. அட!சூப்பரா இருக்குங்க!

    ReplyDelete
  23. ஆமி, நல்லா இருக்கு. மேலே யானை படம் மியூசியம் நான் போய் பார்த்திருக்கேன். நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  24. அஸ்ஸலாமு அழைக்கும்

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  25. நல்ல தவலகளை உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் விவரித்து இருப்பது அருமை.

    ReplyDelete
  26. /இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள் :)
    இந்த chammyumஅப்டிதான் கூறுகிறாள்

    ReplyDelete
  27. ஆமி தேடிப்பிடிச்சு நல்ல உபயோகமான விஷயங்களாகப்பதிவு போடுரீங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  28. கண்டிப்பா பாக்கணும். உங்க புண்ணியத்துல இலவசமா பாக்க போறேன்.

    ReplyDelete
  29. //புறம் பேசாமல் ஒரு புறமாய் ஒதுங்கி புண்ணியமா ஒரு வேலை செய்தார்கள்..//
    நல்ல வார்த்தை பிரயோகம்..நல்லா இருக்கு.Museum ம் சரி அதற்கான அறிவிப்பு&முன் அறிவிப்பும் சரி எல்லாம் அழகு.

    என்றும் அன்புடன்
    ஆஷிக்

    ReplyDelete
  30. நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதுங்க

    ReplyDelete
  31. ஆன்லைன்லையும் வந்துடுச்சா????"
    /// ஆமா ஆமினா.... ஆன்லைன்லதான் அதிராவும் வந்திருக்கிறேன்.. வணக்கம்.


    இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள் :) ஆதிக்கமும் செய்யலாம்..அகப்பட்டும்போகலாம்( எதாவது புரியுதா?? :)) . புரியலேனாலும் பரவா இல்ல :-)./// என்ன இப்புடிச் சொல்லிட்டீங்க... புரியாட்டில் புரியவச்சிடுவமில்ல..:)

    முதன்முதலில் வந்தேன் பார்த்தேன் ரசித்தேன்... அனைத்தும் அழகு ஆஆஆஆஆஆஆஆஆமினாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ.

    ReplyDelete
  32. நல்ல விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்!



    அழகிய அனுபவம் பெற விரும்பினால் இங்கே வாங்க....!



    அப்டீன்னு சப்டைட்டில் போட்டு இருக்கீங்க!

    வந்தேன்!

    கிடைத்தது!

    நன்றி!!

    ReplyDelete
  33. புதிதாய் வந்த எனக்கு புதுமையான விஷயத்தை கூறினீர்கள் .நன்றி!!

    ReplyDelete
  34. தாங்கள் தந்த விருதை என் மெட்ராஸ் பவன் தளத்தில் இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  35. good...pls visit my blog also kmr-wellwishers.blogspot.com

    ReplyDelete
  36. நல்லாயிருக்கே.. பகிர்வுக்கு நன்றி சகோதரி..

    ReplyDelete
  37. அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மியூசியம்..அப்படினா..எதோ Music Theater னு நினைச்சேன். ////


    அதான் மியூசியம் போக பயமா... அந்த பயம் இன்னும் இருக்கா..?

    ReplyDelete
  38. ///////இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள் :) ஆதிக்கமும் செய்யலாம்..அகப்பட்டும்போகலாம்( எதாவது புரியுதா?? :)) . புரியலேனாலும் பரவா இல்ல /////
    ஆமினா இந்த வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை.....
    நான் என்றும் யாரையும் ஆதிக்கம் செய்ய முற்படுவதில்லை அதே நேரத்தில் அகப்பட்டும் கொள்வதில்லை. ஆனால் சில பேர் அன்பால் ஆதிக்கம் செய்யும் போது அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதில்லை...
    ////இணைய உறவுகளில் உணர்வுகள் கூட புரிந்து கொள்ளமுடிகிறது. பாசங்கள் கூட பகிர்ந்து கொள்ளமுடிகிறது////
    நன்றாக உணர்ந்து எழுதுகிறீரகள்.

    உள்ளத்தால் உணர்ந்து அனுபவித்து எழுதுவது என்றும் நிலைத்து நிற்கும். வாழ்த்துக்கள் என்றென்றும்........

    ReplyDelete
  39. @அமைதிசாரல்
    மிக்க நன்றி

    @ஜீ
    //.ஆமா நீங்களும் அரசியலுக்கு....? :-)//
    வர எலக்‌ஷன்ல நின்னா போதுமா? :) வருகைக்கு நன்றி ஜீ

    @சமுத்ரா
    மிக்க நன்றி சகோ

    @சகோ ஆஷிக்
    //சொந்த வரிகளாயின் //
    சொந்த வரிகள் தான் சகோ
    மிக்க நன்றி

    @வெறும் பய
    மிக்க நன்றி சகோ

    @சகோ ரஜின்
    வஸ்ஸலாம்
    மிக்க நன்றி சகோ

    @பாலாஜி
    மிக்க நன்றி பாலாஜி

    @கருண்
    மிக்க நன்றிங்க கருண்

    @சித்ரா
    //..... stopபாதீங்க ..... continueங்க.....!//
    ;)
    மிக்க நன்றி சித்ரா

    @மாணவன்
    மிக்க நன்றி சகோ

    @லெட்சுமிம்மா
    மிக்க நன்றிம்மா

    @பிரபு
    //ஸாரி சகோ.... நான் என் பின்னூட்டத்தை நீளம் கருதி Stopப்ப வில்லை! :)))//
    ;)
    பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன... அனுப்ப வேண்டிய முகவரி .................. ;)


    @பாரதி
    மிக்க நன்றி பாரதி

    @அரசன்
    மிக்க நன்றி அரசன்

    @ அந்நியன்
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  40. @ஆஷிக்
    //நல்ல வார்த்தை பிரயோகம்..நல்லா இருக்கு.Museum ம் சரி அதற்கான அறிவிப்பு&முன் அறிவிப்பும் சரி எல்லாம் அழகு.//
    எப்படி மனசு வந்துச்சு பாராட்ட? ;) ரொம்ப நன்றி மா... தொடர்ந்து வா !!

    ReplyDelete
  41. @சிவகுமார்
    //கேட்டதற்கு சிங்கப்பல் என்றனர். //
    லக்னோ மீயூசியத்துலையும் இருக்கு. உங்களுக்கு எத்தன பல்லு தான் இருக்கு சகோ? :)

    @ஜலீலாக்கா
    மிக்க நன்றி கா

    @சிபி செந்தில்குமார்
    //sujaadhaa touch. m m//
    :)
    மிக்க நன்றி சகோ

    @இளங்கோ
    மிக்க நன்றி இளங்கோ

    @தம்பி கூர்மதியன்
    //நல்லா ஒரு 6வது படிக்கிற பையன் கட்டூரை மாதிரி இருந்துச்சு..//
    நான் அதுவரைக்கும் தான் படிச்சேன்னு உங்களுக்கு யார் சொன்னது ;)
    மிக்க நன்றி சகோ

    @ஹாஜா
    மிக்க நன்றி ஹாஜா

    @அன்புடன் அருணா
    மிக்க நன்றி அருணா

    @வானதி
    //மேலே யானை படம் மியூசியம் நான் போய் பார்த்திருக்கேன். //
    அப்படியா?
    மிக்க நன்றி வானதி

    @ஆயிஷா
    வஸ்ஸலாம்
    மிக்க நன்றி ஆயிஷா

    @ஸாதிகாக்கா
    மிக்க நன்றிக்கா

    @chammy fara
    //இந்த chammyumஅப்டிதான் கூறுகிறாள்//
    :) அப்ப ரொம்ப கவனமா ஒவ்வொரு அடியும் எடுத்து வைப்பீங்கன்னு நம்புறேன்
    மிக்க நன்றி தோழி

    @கோமு
    //தேடிப்பிடிச்சு நல்ல உபயோகமான //
    தேடிப்பிடிச்சது நம்ம ஆஷிக். அவன தான் பாராட்டணும்.
    மிக்க நன்றி கோமு

    @பலே பிரபு
    மிக்க நன்றி பிரபு

    @ரியாஸ்
    மிக்க நன்றி ரியாஸ்

    @அதிரா
    //ஆன்லைன்லதான் அதிராவும் வந்திருக்கிறேன்.//
    உங்கள எத்தன நாளா தான் தேடுறது?? இப்பவாவது வந்தததுக்கு மிக்க நன்றி அதிரா

    @மாத்தியோசி
    மிக்க நன்றி சகோ

    @மைதீன்
    மிக்க நன்றி மைதீன்

    @சிவகுமார்
    விருதை ஏற்றமைக்கு மனமார்ந்த நன்றி சிவகுமார்

    @ஜெயகுமார்
    மிக்க நன்றி ஜெயகுமார்

    @தோழிபிரஷா
    மிக்க நன்றி பிரஷா

    @இளம்தூயவன்
    மிக்க நன்றி சகோ

    @சௌந்தர்
    ;)
    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  42. @அவர்கள் உண்மைகள்

    என்ன செய்ய சகோ
    //நான் என்றும் யாரையும் ஆதிக்கம் செய்ய முற்படுவதில்லை அதே நேரத்தில் அகப்பட்டும் கொள்வதில்லை. ஆனால் சில பேர் அன்பால் ஆதிக்கம் செய்யும் போது அதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதில்லை...//
    மாய உலகில் தன்னை சுத்தி என்ன நடக்க போகுதுன்னு யாருக்கும் தெரியுறதில்ல. சொன்னாலும் புரிஞ்சுக்குற மனநிலையில் அவங்கலாம் இல்ல.
    இறைவனின் துணையோடு கணவர், நண்பனின் வழிகாட்டுதலோடு ஒவ்வொரு அடியும் கவனமாய் எடுத்து வைப்பதால் தான் பத்திரமாக இருக்கிறேன். சொல்லியும் திருந்தாதவர்களை என்னவென்று சொல்ல

    வருகைக்கு மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  43. அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...,இணையத்தளத்தை பற்றியும்,அருங்காட்சியம் பற்றியும் உங்களுடைய எழுத்து ரசிக்கும் படி இருந்தது.
    \\\இணையம் ஒரு கூர்வாள் என்றே இந்த ஆமினா கூறுவாள் :) ஆதிக்கமும் செய்யலாம்..அகப்பட்டும்போகலாம்( எதாவது புரியுதா?? :))

    இதை புரியும் படி சொல்ல முடியுமா என்ன ஆமினா... நூற்றுக்கு நூறு உண்மையானது உங்களுடைய கூற்று.
    மிகவும் அருமையான கருத்துக்களை ,விஷயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆமினா...
    இன்னும் நிறைய எழுதுங்கள்.நாங்களும் தெரிந்துகொள்வோம்.
    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete

இம்புட்டு தூரம் வந்துட்டீங்களா?? மனசுல பட்டத சொல்லிட்டு போங்க :-)